அனுமனும் இராமனும் ே 329 "இல்லாத உலகத்து எங்கும், இங்குஇவன் இசைகள் கூரக் கல்லாத கலையும், வேதக்கடலுமே" என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச் சொல்லின் செல்வன்?வில் ஆர் தோள் இளையவீர விரிஞ்சனோ? விடைவலானோ?" - கம்ப. 3768 "மாணி ஆம் படிவம் அன்று, மற்று இவன் வடிவம், மைந்த! ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற சேண் உயர் பெருமை தன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க் காணுதி மெய்ம்மை என்று, தம்பிக்குக் கழறி, கண்ணன்." - கம்ப. 3769 இந்த இரண்டு பாடல்களையும் படித்தவுடன் எதிரே நிற்பவனை, அதிலும் சுக்கிரீவனுக்குப் பணி புரிகின்றேன் என்று சொல்பவனை நண்பனாக ஆக்கிக் கொண்டால், தான் வந்த காரியத்திற்குச் சிறந்த துணையாக இருக்கும் என்று கருதியே இராமன் இவ்வாறு புகழ்ந்தான் என்று நினைக்கவும் இடமுண்டல்லவா? அக்கருத்தை அடியோடு மறுப்பதற்காகவே இராமன், அனுமனைப் புகழ்ந்து கூறும் இந்த இரண்டு பாடலையும் சொல்வதற்கு முன்னரே எந்த அடிப்படையில் இராமன் இதனைச் சொன்னான் என்று தெரிவிக்கின்றான் கவிஞன். - “மாற்றம் அஃது உரைத்தலோடும், வரிசிலைக் குரிசில் - மைந்தன் தேற்றம் உற்று, இவனின் ஊங்குங் செவ்வியோர் இன்மை - தேறி, 'ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும் வேற்றுமை இவனொடு இல்லையாம்' என, . - விளம்பலுற்றான்." - கம்ப. 3767
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/349
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை