அனுமனும் இராமனும் ே 331 இராமன் நெருங்கி வருவதற்கு முன்னரே, தான் கொண்ட முடிவுகள் சரியானவையே என்பதை அவன் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டான் அனுமன். அனுமனின் கண்களைப் பார்த்தவுடனேயே இவன் உண்மையில் பிராமண பிரமச்சாரி அல்லன், இவ்வுலகம் முழுமைக்கும் அச்சாணி போன்றவன். இவன் கல்லாத கலையும், வேதக் கடலும் உலகிடை இல்லை என்பவற்றை யெல்லாம் ஒரு வினாடிப் பொழுதில் அறிந்துகொண்டதால்தான், இராகவன் அனுமனை இரண்டு பாடல்களில் புகழ்ந்து பேசுகிறான். கண்ணொடு கண்ணிணை நோக்கியபின் ஒருவரை ஒருவர் முழுவதுமாகப் புரிந்துகொண்டனர். இதன் விளைவாக இந்த வினாடி முதல் மீட்டும் அயோத்திக்கு வரும்வரை அனுமனை ஒர் ஒப்பற்ற தனி இடத்தில் வைத்தே பழகுகிறான் இராகவன். இராமனுக்கு வாலிபற்றி விளக்கியவன் அனுமன் மிக இன்றியமையாத சில இடங்களில் அனுமனுடைய சொல்லுக்குப் பெருமதிப்பு வைத்துள்ளான் இராகவன் என்பதைப் பின்னரும் காணலாம். சுக்கிரீவனுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவன் துயரத்திற்குக் காரணமானவன் அவன் தமையன் வாலி என்ற பேச்சு வருகிறது. இராகவன் பேராற்றல் உடையவன் என்பது அறியப்பட்ட உண்மை. ஆயினும், இப்பொழுது எதிரியாகப் போகிற வாலியைப் பற்றி அவன் முழுவதுமாக அறிய வேண்டும். மாற்றான் வலி தெரியாமல் களத்தில் இறங்குவது சரியன்று. ஒருவேளை சுக்கிரீவனே வாலி பற்றிச் சொல்லியிருப்பின் குழப்பத்திற்குப் பெயர் போன அவன் இராமனையும் குழப்பி யிருப்பான். அந்தச் சூழ்நிலை ஏற்படாத வகையில் அறிவின் மிக்கவனாகிய ஆஞ்சநேயன் அற்புதமாகப் பதின்மூன்று பாடல்களில் (3822 - 3834) வாலியின் சிறப்புகளைக் கூறுகிறான். சொல்லின் செல்வனாகிய அனுமன் வாலியைப் பற்றி நிரந்து இனிது கூறும் முறையில் கூறிவிட்டதால் இராமன் மறுவினாத் தொடுக்காமல் தான் செய்ய வேண்டியது என்ன என்று முடிவு செய்துகொண்டான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/351
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை