332 ேே இராமன் - பன்முக நோக்கில் வாலிபற்றி அனுமன் கூறிய தகவல்களில் மிக இன்றியமை யாத சிலவற்றை ஈண்டுக் காணலாம். "நான்கு வேதங்களையும் கற்றவன், சூலபாணியாகிய சிவபெருமானின் பக்தன், வரம்புஇல் ஆற்றல் உடையவன்" (3822)"பாற்கடலைத் தான் ஒருவனாகவே நின்று கடைந்தவன்" (3823) "பஞ்ச பூதங்களின் ஆற்றலைப் பெற்றவன்” (3824) "போருக்கென்றே அவன் எதிரே யார் சென்றாலும், எதிரில் நிற்பவர்களின் வலிமையில் பாதிப்பங்கு அவனிடத்துச் சேர்ந்துவிடும். நாள்தோறும் எட்டுத் திக்குகளிலும் சென்று அட்டமூர்த்தியாக விளங்கும் சிவபரம்பொருளை வணங்கும் ஆற்றலும் பழக்கமும் உடையவன்.” (3825) "கந்தவேள் வேல் செலாது அவன் மார்பில்" (3826) "மேருமலை போன்றவற்றை யும் தன் தோளின் ஆற்றலால் அசைக்கக்கூடியவன்” (3827) "திருமால் பண்டெடுத்த அவதாரங்களில் வராக அவதாரமும், கூர்ம அவதாரமும் இவனுக்கு நேரில்லை. இரணியனைப் பிளந்த நரசிம்மமும் இவன் தோளைக் கிழிக்க வல்லதன்று” (3828) "கடல் சலிப்பதும், காற்று வீசுவதும், சூரியன் இயங்குவதும் அவன் ஆணைக்கு உட்பட்டேயாம். (3830) இராமனுக்கு இருந்தது ஒரே வழி: அனுமனின் சொல்லாற்றல் வாலியைப் பற்றி அனுமன் கூறிய குறிப்புகளில் சில மிக மிக இன்றியமையாதவை. இராமன் வாலியை எவ்விதத் தவறும் இல்லாமல் உண்மையாக எடையிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் கூறியவை இவை. வாலி வேதத்தின் கரை கண்டவன். சிவபெருமானின் சிறந்த பக்தன்; பாற்கடலை ஒற்றையாகக் கடைந்தவன்; பஞ்ச பூதங்களின் ஆற்றலைப் பெற்றவன்; கந்த வேள் வேல் செலாது, அவன் மார்பில் வராகம், கூர்மம், நரசிம்மம் என்ற அவதாரங்கள் அவனை ஒன்றும் செய்யா; நாள்தோறும் எட்டுத் திக்கிலும் சென்று சிவனை வழிபடுபவன்; போரிட எதிரே வருபவர்கள் ஆற்றலில் பாதியைப் பெற்று விடுபவன் - இந்த
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/352
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை