336 38 இராமன் - பன்முக நோக்கில் "குழைக்கின்ற கவரிஇன்றி, கொற்றவெண்குடையும் இன்றி, இழைக்கின்ற விதிமுன்செல்ல, தருமம் பின் இரங்கிஏக, ●s顿器感植事**#峰咀盔验愚●响***幽郎母理●●#-峰举品蟒争海绅** - கம்ப 1606 இராமன் வருகிறான் என்றால், சிந்தனையைத் தூண்டுகிறான் கவிஞன். இராகவன் பின் பிறந்தோனாகிய இலக்குவன்கூட விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் என்று கூறுகிறானே, அப்படி இருக்க அனைத்து உயிர்களின் விதியை நிர்ணயிக்கும் மூலப் பரம்பொருள் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அவதாரம் செய்து இதோ நடந்து வருகிறான். அப்படி இருக்க அவனுக்கு முன்னே விதி ஏதோ ஒன்றை இழைத்துக் கொண்டே செல்கிறது. அதன் பின்னே அதை மீறமுடியாமல் அறத்தின் மூர்த்தி வருகிறான். அது மட்டுமா? தருமத்தின் வடிவான அவன் நடக்க, தரும தேவதை அவன் பின்னே இரங்கி, ஏங்கி மெல்ல நடந்து வருகின்றது என்று கம்பன் கூறும் வரைபடத்தை மனத்துட்கொண்டால், பின்னர் இராமன் செய்யப்போகும் செயல்களையெல்லாம் ஒரளவு விளங்கிக் கொள்ள முடியும். அதனை நன்குணர்ந்திருக்கிறான் வள்ளல் என்பதனை அவன் சொற்களாலேயே கூறுகிறான் கம்பநாடன். “மைந்த! விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?” என்றான். - நடையில் நின்று உயர் நாயகன், அறத்தின் மூர்த்தி மானிடனாகப் பிறந்துவிட்டதால் ஒரளவு விதியின் பிடியில் அகப்பட்டுத் தொழிற்படவேண்டும் என்பதை உணர்ந்தே உள்ளான். முடி துறந்து அவன் வரும்பொழுது அவன் முன்னே ஒரு வரைபடத்தை இழைத்துக் கொண்டே வரும் விதி, இராவணப் போர் முடிகின்ற வரை தசரதராமனை விட்டு நீங்கவே இல்லை. அதே விதிதான், கவந்தன், சவரி என்ற இருவர் மூலமாகத் தொழிற்பட்டு சுக்கிரீவனிடம் செல்லுமாறு இராமனைப் பணிக்கிறது. வாலி இத்தகையவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/356
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை