அனுமனும் இராமனும் ே 337 என்று அனுமான் கூறியபொழுது அவனை விண்ணுலகு அனுப்ப வேண்டியது தன்னுடைய கடமை என்று விதி முன்னரே இழைத்துவிட்டதை உணர்கிறான் இராகவன். வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் கவந்தனும் சவரியும் கூறிய அறிவுரையில் இரண்டு நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளளன என்பதை இராகவன் அறிகிறான். ஒன்று, வாலியை விண்ணுலகு அனுப்புவது, இரண்டாவது அனுமனைத் தன் தொண்டனாகப் பெறுவது. இவ்விரண்டும் நடைபெறவேண்டுமானால் சுக்கிரீவனைச் சேர்த்துக் கொண்டே ஆகவேண்டும். அனுமனைச் சந்தித்த பொழுதே இருவரும் கண்களில் பேசிக்கொண்ட முறையில் தான் வந்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு அனுமன் துணை தேவை என்பதை மூல இராமன் புரிந்துகொள்கிறான். அவன் நினைத்தது சரிதான் என்பதை இறக்கும் தறுவாயிலுள்ள வாலி, அனுமனைச் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம், நின் செய்ய செங்கைத் தனு என நினைதி என்று கூறும் வகையில் வலியுறுத்துகிறான். அனுமன் ஒருவனே ..... மகாராஜா என்று பின்னர் அழைக்கப்படும் சுக்கிரீவனோ, சாடாயுவோ, வாலியோ செய்ய முடியாத ஒன்றை அனுமன் ஒருவன் மட்டுமே செய்து முடிக்கக்கூடும் என்பதை இராமன் முன்னே, வரைபடம் இழைக்கும் விதி நிறுவிவிட்டது. அனுமன் இல்லையானால் சுக்கிரீவன் துணை இருந்தும்கூடப் பிராட்டி இருக்கும் இடத்தை இராமன் அறிய முடியாமல் போயிருக்கும். தன் இன்னுயிரை நீக்கிக் கொள்ள முடிவு செய்து, அந்த முயற்சியில் ஈடுபட்டுவிட்ட பிராட்டியைக் காத்ததும் மருத்து மலையைக் கொணர்ந்து இலக்குவன் முதலிய அனைவரையும் உயிர்ப்பித்ததும் அனுமனுடைய செயல்களே ஆகும். அனுமன் செய்த இந்த அரும் பெரும் உதவியை நினைந்து நன்றியுணர்வோடு பிராட்டி, அசோகவனத்தில் பேசுவதைக் காணலாம்: அ-22
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/357
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை