338 38 இராமன் - பன்முக நோக்கில் "மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதுஆய், செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால்எளியது உண்டே? அம்மைஆய், அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே! இம்மையே மறுமைதானும் நல்கினை, இசையோடு' என்றாள்" - கம்ப. 5298 "பாழிய பணைத்தோள் விர! துணை இலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே! யான் மறுஇலா மனத்தேன் என்னின், ஊழி ஒர் பகலாய் ஒதும் யாண்டு எலாம், உலகம் ஏழும் ஏழும் விவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி! என்றாள்" - கம்ப 5299 சுக்கிரீவன் ஆட்சியில் ஏவல், கூவல் பணி செய்வேன் என்று தன்னடக்கத்தோடு கூறிக்கொள்ளும் இந்த அனுமன், பிராட்டி உயிர்தப்பக் காரணமாயிருந்தான். பிரம்மாத்திர படலத்தில் அனைவரும் தீர்ந்தனர், யானும் தீர வேண்டும் என்ற முடிவுடன் இராமன் இருக்கும் பொழுது, மருத்து மலையைக் கொணர்ந்து அனைவரும் உயிர் பெறச் செய்தவன் இந்த அனுமனே ஆவான். அந்தப் பேருதவிக்கு நன்றி பாராட்டும் முறையில்தான் பெரிய பெருமாள் பின்வருமாறு பேசுகிறான்: 藏鳍 羽s罗姆想珍妮哈姿始密密担s确幽总理幽领始总玲●函舜始多部爱●昂哆跟登é毫牵兹始单总姆鸭 ஈறுசேர் மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்; நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்!" - கம்ப 8812 காப்பியத் தலைவன், அவன் தம்பியர், தாயர், காப்பியத் தலைவி ஆகிய அனைவரும் உயிர்தப்ப உதவி செய்தவன் மாருதி ஒருவனே ஆவான். எனவே, இந்த மாருதியைக்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/358
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை