340 38 இராமன் - பன்முக நோக்கில் இப்பொழுது அவதார நோக்கம் நிறைவேற வேண்டுமானால் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். முதலாவது மாயாசீதை நிகழ்ச்சியில் வெட்டுண்டவள் சீதை என்றே அறிஞனான அனுமன் உள்பட இராமன் வரை அனைவரும் நம்பிவிட்டனர். இதன் முடிவாக இராம இலக்குவர்கள் அயோத்தி செல்லும் எண்ணத்துடன் அனுமன் முதுகில் ஏறிப் புறப்படத் தயாராகிவிட்டனர். இது நடைபெற்றிருந்தால் கதை வேறுவிதமாக முடிந்திருக்கும். இதன் உண்மைத் தன்மை அறிந்து அதை நிறுத்தியவன் வீடணன். அதேபோல நிகும்பலைப் பற்றி அறிவித்தவனும் வீடணனே ஆவான். கதைப் போக்கை மாற்றி அமைக்கக் கூடிய இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வீடணனைத் தவிர வேறு யாரும் உதவியிருக்க முடியாது. அத்தகைய வீடணனைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அத்தனை பேருக்கும் எதிராக வாதாடியவன் அனுமனே ஆவான். அயோத்தியில் முடிதுறந்த இராகவனுக்கு முன்னர்ப் புறப்பட்டு யாருக்கும் தெரியாமல் ஒரு வடிவில் வரைந்து கொண்டே வந்த விதி, வீடணனால் இத்தனை காரியங்கள் நிகழ வேண்டும் என்பதற்காக அனுமன் மூலமாக ஒரு வடிவை வரைந்து விட்டது. பல்வேறு காரணங்களைக் காட்டி, அனுமன் கூறிய முடிவை ஏற்றுக்கொண்ட இராகவன் என்ன செய்தான் என்பதை மிக அற்புதமாகக் கவிஞன் ஒரு பாடலில் தருகின்றான். "மாருதி அமுத வார்த்தை செவிமடுத்து, இனிது மாந்தி, பேர்அறிவாள! நன்று நன்று எனப் பிறரை நோக்கி, "சீரிது; மேல் இம்மாற்றம் தெளிவுறத் தேர்மின் என்னா, ஆரியன் உரைப்பதானான்; அனைவரும் அதனைக் கேட்டார்” - கம்ப 6467 மாருதி கூறிய சொற்களை 'அமுத வார்த்தை என்கிறான் கவிஞன். அமுதம் என்பது சாவாமை தருவது. இங்கு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/360
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை