342 38 இராமன் - பன்முக நோக்கில் "தேவர்க்கும், தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவ தேவர் மூவர்க்கும், முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்! ஆவத்தின் வந்து, "அபயம்!" என்றானை, அயிர்த்து அகலவிடுதி ஆயின் கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? கொற்ற வேந்தே" - கம்ப 6464 "பகைப் புலத்தோர் துணை அல்லர்” என்று இவனைப் பற்றோமேல், அறிஞர் பார்க்கின், நகைப் புலத்ததாம் அன்றே. -- - கம்ப 6468 எதுவும் நாடாத கைங்கரியத் தொண்டன் இதுகாறும் கூறியவற்றிலிருந்து இராமன் தம்பியர் என்று சேர்த்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 'தொண்டன்' என்று சேர்த்துக் கொள்ளப்பெற்ற அனுமன் செய்த உதவி கணிப்பிற்கு அப்பாற்பட்டதாகும் என்பது விளக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் உதவியைப் பெறற பிராட்டி அவனுக்குக் கைம்மாறு செய்ய விரும்பினாள். அதன்மூலம் தன் நன்றிக் கடனையும் நிறைவேற்றலாம் என நினைக்கிறாள். ஆனால், அனுமனைப் பார்த்து அவன் பேசியதைக் கேட்ட பிறகு மகா ஞானியாகிய அவன் எந்த ஒரு பரிசிலையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். 'வேண்டாமை என்ற விழுச்செல்வம்" பெற்ற அவன் எந்த வரத்தையும் கேட்கப்போவதும் இல்லை. அதை அறிந்துகொண்ட பிராட்டி 'கதியற்றவளாகிய என்னுடையதுயரத்தைப் போக்கிய வீரனே, கைம்மாறு கருதாமல் வள்ளன்மையோடு இப்பணியினை நிறைவேற்றிய உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். ஊழிகள் தோறும் மறைந்து தோன்றும் இவ்வுலகங்கள் வீயினும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/362
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை