344 38 இராமன் - பன்முக நோக்கில் பரிசிலாகிய வீடு பேறு வரை பெற்று மகிழ்ந்ததைப் பரம்பொருள் கண்டுள்ளான். இப்பொழுது இந்த இராமாவதாரத்தில் தன் எதிரே நிற்கும் ஒரு தொண்டன் ஏனைய பக்தர்களிலும் முற்றிலும் மாறுபட்டவனாக காட்சி அளிக்கிறான். இராகவன் மட்டுமல்ல, பிராட்டியும்கூட வீடு பேற்றையே விரும்பாத இந்தத் தொண்டனைப் பார்க்கிறாள். நீண்ட நேரம் இவனைப் பார்த்துக்கொண்டிருந்த இராகவன் ஏனையோருக்கும் பல்வேறு பரிசுகளைத் தந்தான். ஆனால், அவர்களிலும் இவன் மாறுபட்டவன் என்பதை தான் அறிந்திருக்கிறான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்த முடியும்? ஒரு வழியினைக் கண்டு கொண்டான், இராகவன். சாதாரணமாக இராகவன் தான் குகன், பரதன் போன்றவர்களை தழுவிக் கொள்வது வழக்கம். அவர்கள் அனைவருக்கும் தராத ஒரு சிறப்பை அனுமனுக்குத் தர விரும்புகிறான். "மாருதிதன் ஐயன் மகிழ்ந்த, இனிது அருளின் நோக்கி, 'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக! என்றான்." - கம்ப 10351 வீடும் வேண்டா விறலினான் பெற்ற வீறு இப்பாடலை மேலாகப் பார்க்கும்பொழுது அனுமனைத் தழுவிக் கொள்ளச் சொன்னான் என்ற அளவில் பொருள் விளங்கிவிடும். இராம காதையில் வரும் எவரும் இராமனை விட உயர்ந்தவர்கள் இல்லை. தந்தை என்ற காரணத்தால் தசரதன் இராகவனைத் தழுவிக் கொண்டான் என்று வரும் ஓர் இடம் தவிர ஏனைய இடங்களிலெல்லாம் இலக்குவன், பரதன் உள்பட யாராக இருப்பினும், இராகவன் அவர்களைத் தழுவிக் கொண்டதாக வருமே தவிர, இராகவனாகப் பார்த்து
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/364
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை