பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர்களும் இராமனும் ே 347 அறிவுரைகளைத் தந்து, குலகுருவாக விளங்கியவன் வசிட்டன். பல காலம், அரசனாக இருந்து ஆட்சி செய்து, ஆட்சியிலும், மக்கள் சமுதாயத்திலும் புதிது புதிதாகத் தோன்றும் பிரச்சினைகளைச் சந்தித்து, தேவையான பொழுது புதிய மாற்றங்களை அஞ்சாமல் கொண்டு வந்து சமுதாயத்திற்கு அறிவித்து ஆட்சிசெய்தவன் விசுவாமித்திரன். இந்த நீண்ட நெடுங்கால அனுபவத்தோடு கடுந்தவம் இயற்றி, பிரும்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றவன் இந்த விசுவாமித்திரன். நான்கு ஆண் மக்களைப்பெற்று எல்லையற்ற மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கிறான் தசரதன். திரிசங்கு மன்னனுக்காக வேறு உலகங்களையே படைத்தவன், மற்றோர் தேவ உலகையும் இந்திரனையும் படைக்கின்றேன்' என்று மாபெரும் புரட்சியைச் செய்த விசுவாமித்திரன் கொலுமண்டபத்தில் நுழ்ைந்ததும், மன்னன் தசரதன் அப்பெருமான் திருவடிகளில் விழுந்து எழுந்தான். அந்த முனி புங்கவனை ஒரு பொன்னாசனத்தில் இருத்தி, அவனுக்குரிய வழிபாடுகளை முறையாக இயற்றிய பின்னர், அந்த மாமுனிவன் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்துத் தன்பால் வந்தது, தான் செய்த பெருந்தவம் என்று கூறிய தசரதன், முனிவன் இட்ட பணியை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாகக் கூறினான். தசரதன் வினாவிற்கு விடை கூறப் புகுந்த விசுவாமித்திரன், அரசே! என்போன்ற முனிவர்கட்கு இடையூறு வந்தால் நாங்கள் அடைக்கலம் புகுதத் தகுதியான இடங்கள் முறையே இமயமலை, பாற்கடல், பிரம்மலோகம், இந்திரனுடைய நகரம், அயோத்தி நகரம் என்ற இந்த ஐந்தும்தானே? இன்று இந்திரன் அமைதியாகத் தேவர் உலகை ஆட்சி செய்கிறான் என்றால், அவனுடைய பகைவனாகிய சம்பராசுரனை நீ தொலைத்து, ஆட்சியை இந்திரனுக்குத் தந்ததால் தானே? இவ்வாறு முனிவன் தயரதன் வினாவிற்கு விடைகூறத் தொடங்கினான். இவ்வாறு புகழ்ந்தவுடன் எல்லையில்லாத உவகைக் கடலில் மூழ்கி