கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ே 19 எட்டுத் துறைகள்பற்றி வரும் சூத்திர உரையில், மறுபடியும் இராமகாதை பற்றிய மற்றோர் பாடற் பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார். (தொல் புறத்-12-உரை மேற்கோள்) பகைவர் கோட்டை ம்திலை வளைத்து அதன்மேல் ஏறி, உள்ளே புக விரும்புவர்கள் மிகுதியான கிடுகும் கேடகமும் கொண்டு செல்வர். அதுபற்றிக் கூறவந்த தோலின் பெருக்கம்’ என்ற துறைக்கு மேற்கோளாகப் பின்வரும் இப் பழம் பாடல் காட்டப் பெறுகிறது: இருசுடர் இயங்காப் பெருமூது இலங்கை நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை எண்குஇடை மிடைந்த பைங்கண் சேனையில் பச்சை போர்த்த பல்புறத் தண்டை எச்சார் மருங்கினும் எயில்புறத்து இறுத்தலின் கடல்சூழ் அரணம் போன்றது உடல்சின வேந்தன் முற்றிய ஊரே - ஆசிரிய மாலை - புறத்திரட்டு 852 (சூரிய சந்திரர் அதன்மேல் செல்ல முடியாத பழைய இலங்கை நகரை, வலிய தோளையுடைய இராமன் முற்றுகை இட்டபொழுது, கரடிகள் (எண்கு) நிறைந்த பலவாகிய படைவகுப்பு (தண்டை) கேடயத்துடன் (பச்சை), மதிலைச் சுற்றி எல்லாப் பக்கமும் நிறைந்து நின்றமையின் கடலால் சூழப்பெற்ற கோட்டைபோலிருந்தது, சினத்துடன் இராமனால் முற்றுகை இடப்பட்ட அவ்வூர்.) இப்பாடலும் முன்னர்க் காட்டப்பெற்ற பழம்பாடலும் ஒரே நூலின் இரு பகுதிகள் என்பதை அறிந்துகொள்ள அதிக நேரம் ஆகாது. இப் பாடலின் நடை, சொல் ஆட்சி, ஒசை நயம் என்பவற்றைக் காணும்பொழுது சங்க காலத்தை அடுத்த காலத்தில் ஏறத் தாழச் சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில், இத்தகைய பாடல் முறையில், இராம காதை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை