முனிவர்களும் இராமனும் ேே 351 அவதாரம் என்று கற்பனையில் கூடத் தசரதன் நினைத்துப் பார்த்ததில்லை. திருவின் கேள்வன்' என்று அவன் சொல்லியது, மூத்த மகனாகிய அவன் நாளை இந்த அரசத் திருவை ஏற்றுக் கொள்ளப் போகிறவன்' என்ற கருத்தில்தான் ஆகும். உடன் பயணத்தில் பெற்றவை, கண்டவை விசுவாமித்திர முனிவனைப் பின் தொடர்ந்து சென்ற இராம - இலக்குவருக்குப் புதிய புதிய காட்சிகளும், அனுபவங்களும் கிடைத்தன. கொடிய பாலையைக் கடக்கும் பொழுது எப்படி ஊறுநேராமல் கடப்பது என்பதற்கு முதன் முதலாக விசுவாமித்திரன் சோதரர் இருவருக்கும் இரு மந்திரங்களை உபதேசித்தான். இயற்கையை எந்த நிலையிலும் ஒரு மனிதன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்பதே அரண்மனையில் வாழ்ந்த இராகவனுக்குப் புதிய அனுபவம் ஆகும். இதன் பிறகு இயற்கையின் பேரழகை ஒருவரே அழிக்க முடியும் என்ற உண்மையைத் தாடகையின் வரலாற்றைக் கூறும் விசுவாமித்திரன் மூலம் இராகவன் அறிந்து கொண்டான். பொழிலும் பாலையும் முனிவர்கள் என்பவர்கள் எங்கே தங்கினாலும் நந்தவனங்கள், சோலைகள் என்பவற்றை அமைத்து இயற்கைச் சூழலை வளர்த்தார்கள். இயற்கையோடு ஒன்றிய வாழ்வுடைய இவர்களுக்கு இயற்கை துணைபுரிந்தது; இயற்கைக்கு இவர்கள் துணைபுரிந்தார்கள். இயற்கையும், மனிதர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வளர்ந்ததால் இவர்கள் தங்கிய இடங்களிலெல்லாம் அமைதி குடிகொண்டது. இந்தப் பேரமைதி காரணமாகப் புலியும் மான்களும் பகைமை மறந்து இவர்களிடையே வாழத் தொடங்கின. அரக்கர்கள் என்பவர்கள் மேலே சொன்ன அனைத்துக்கும் மாறுபட்டவர்கள். இவர்கள் தங்கிய இடங்கள்,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/371
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை