________________
முனிவர்களும் இராமனும் 3 353 என்று பிரிவினை செய்ததோடு நில்லாமல் எக்காரணத்தைக் கொண்டும் ஓர் ஆண், ஒரு பெண்ணைக் கொல்லலாகாது என்ற சட்டம் வகுத்து விட்டது. ஓர் ஆண் இறந்தால் அந்த அளவே நஷ்டமாகும். ஆனால், ஒரு பெண் இறந்தால் அவள் மூலம் உற்பத்தியாகக் கூடிய பல உயிர்கள் அழிந்துபோகும். சமுதாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டவர்கள் 'பெண் கொலை தவிர்க' என்று கூறிவிட்டனர். இந்த நியாயங்களை விசுவாமித்திரன் இதோ கூறுகிறான்: “மனிதர்களை உண்ணும் இவள் என் போன்றவர்கள் உடலில் சதை இன்றி இருத்தலால் எம்மைச் சக்கை என்று விட்டு விட்டாள், இவளை எப்படிப் பெண் என்று கூறமுடியும்,”(376) - “நாணம் உடைய பெண்களுக்கு ஊறுசெய்தால் பிறர் நகைப்பர். போர்க்கருவிகளை ஏந்துகின்ற வீரர்களே ஆயினும் இவள் பெயர் சொன்னால், அவர்கள் ஆண்மை இருந்த இடம் தெரியாமல் மறையும் என்றால் ஆண்மை என்பது அவ்வீரர்களிடை உள்ளதா, அல்லது இவளிடம் உள்ளதா என்பதைச் சிந்தித்துப் பார்" (377) “இவளைக் கண்டு வானவரும் தானவரும் ஓடினார்கள். இந்திரனும் இவளிடம் தோற்றான் என்றால் இவளை என்னென்பது?” (378) , "உலகில் உள்ள உயிர்களையெல்லாம் மாய்த்து, அறத்தை வேரொடும் அழிக்கும் இவள் ஆண் வடிவம் பெற்றிருந்தால் தான் கொல்ல வேண்டும் என்று நினைப்பது சரியோ?" (379) 'எமன் கூட ஒருவனுடைய வாழ்நாள் முடிந்ததா என்று எண்ணி, தரும வழிக்கு மாறுபடாமல் அவர்களைக் கொல்வானே தவிர, இவளைப் போல் மனிதர்களின் வாசனை பட்டவுடன் கொன்று தின்பான் அல்லன்.” (380) “மனிதர்களை வாரி வாயில் போட்டு உண்ணும் இவளை, வடிவத்தை மட்டும் வைத்துக் கொண்டு, பெண் என்று சொல்வது அறிவுடையோர்க்கு அழகன்று.”(381) '/ 4-23