முனிவர்களும் இராமனும் 38 355 அயோத்தியை விட்டுப் புறப்படும்பொழுது தசரதன் கூறிய வார்த்தைகள் இராமன் மனத்தில் நிழலாடுகின்றன. இந்த வினாடியிலிருந்து இராமனுக்குத் தாய், தந்தை, குரு, தெய்வம் ஆகிய அனைத்தும் விசுவாமித்திரன் ஒருவனே' என்று கூறி அனுப்பினான் தசரதன். அறவுரை கூறி ஒருவனை வழி நடத்த வேண்டிய இந்த நால்வரும், விசுவாமித்திரன் ஒருவனே என்று ஆகிவிட்ட நிலையில், அவன் ஆணையை எதிர்க்கவோ, எதிர்த்துப்பேசவோ, மறுக்கவோ தனக்கு உரிமை இல்லை என்கிறான் இராகவன். நால்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ஒருவன், அறன் அல்லாத ஒன்றை, இதுவே அறம்' என்று கூறிவிட்டு, அதை நீ செய்க என்றும் கட்டளை இட்டால் என்ன செய்வது? 'அறனல்லவும் எய்தினால், அது செய்க என்று நீ ஏவினால் என்ற இரண்டிடத்தும் காணப்படும் 'ஆல்', வராது என்ற குறிப்பையே தெரிவிக்கின்றது. வசிட்டன் கற்பித்ததும் விசுவாமித்திரன் கட்டளையும் இப்படிப்பட்ட ஒரு நிலையில் இராமனுக்கும், நால்வரும் ஒருவனாகிய விசுவாமித்திரனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. வசிட்டனிடம் இதுவரை பயின்ற இராகவன் இன்றுவரை அறநூல் சொல்லும் ஒரு பொதுச் சட்டத்தை வசிட்டனிடம் கற்றுக் கடைபிடித்துவந்தான். ஒரு சுத்த வீரன் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு பெண்ணின்மேல் அம்பு தொடுக்கக்கூடாது என்பதே அந்தச் சட்டம். இந்தச் சட்டத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லின் உட்பொருளையும் ஆயாது, பொதுவாகத் தருமநூல் சொல்லிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக அ ைன வ ரும் இதனைக் கடைபிடித்துவந்தனர். சாதாரண நீதிமன்றத்தில் இது வலியுறுத்தப்பட்டது உண்மைதான். இதைத்தான் வசிட்டன் சொல்லித் தந்தான். உலகத்தில் தான் பெற்ற அனுபவம் காரணமாக விசுவாமித்திரன் உச்சநீதிமன்றமாக இப்பொழுது தொழிற்படுகின்றான். வீரன் பெண்ணைக் கொல்லக்கூடாது' என்ற சட்டத்தை எடுத்துக்காட்டி இராகவன் தான் சும்மா
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/376
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை