356 38 இராமன் - பன்முக நோக்கில் இருப்பதற்கு இச்சட்டமே காரணம் என்று சொல்லாமல் சொன் னான். உச்சநீதிமன்றமாகத் தொழிற்படும் விசுவாமித்திரர் இச்சட்டத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதைவிட இதில் சொல்லப்பட்ட பெண் என்பவள் யார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறான். சட்டத்தில் வரும் பெண் என்ற சொல் பெண் உறுப்புக்களைப் பெற்று, பெண் வடிவு கொண்டிருக்கும் ஒருவரையா அல்லது அன்பு, இரக்கம், தாய்மை முதலிய பெண்மைக் குணங்களைப் பெற்றிருக்கும் ஒருவரையா? இதில் யாரைக் குறிக்கிறது? இப்பொழுது உச்ச நீதிமன்றமாகிய விசுவாமித்திரன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஒரு விஷயமாகும் இது. இந்த ஆய்வில் ஆண்மை என்று சொல்லப்படும் குணம் ஒரு பெண்ணிடமிருந்தால் அவளைப் பெண் என்று கூறக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறான் விசுவாமித்திரன். பெண் என்ற சொல்லைத் தாங்கி நிற்கும் அப்பழைய சட்டத்திற்கு விசுவாமித்திரன் என்ற உச்சநீதிமன்றம் தந்த புதிய விளக்கமாகும் இது. விசுவாமித்திரன் புதிய விளக்கம் பிற்பயன் உடையது ஒரு சட்டத்திற்குப் புதிய விளக்கம் தரமுற்படுபவர்கள் விருப்பு, வெறுப்பு, சினம், பெறாமை, தன்னலம் ஆகியவற்றில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுப் புதிய விளக்கம் காணவேண்டும். அவ்வாறு செய்ததைத்தான் சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன், ஆறி நின்ற அறம் அன்று' என்று மிக அற்புதமான ஒரு புதிய விளக்கத்தை விசுவாமித்திரன் கூறுவது இராமனுடைய வாழ்க்கையில் பின்னர்ப் பல வழிகளிலும் பயன்பட்டுள்ளது. தாடகையும் அயோமுகியும் இந்த நேரத்தில் இராமன் முழுவதுமாக இதனை ஏற்றுக் கொள்ளாமல், ஐயனே! நால்வரும் ஒருவராக நின்று நீ இடும் கட்டளையை வேதம் என்றே கொண்டு பணி செய்கின்றேன் என்று கூறித் தாடகைமேல் அம்பு தொடுக்கிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/377
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை