முனிவர்களும் இராமனும் ே 357 விசுவாமித்திரனுடைய புதிய விளக்கம் எப்படி இராமனால் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையோ அதைவிட உடனிருந்த இலக்குவன் இதை ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. எனவே தான் அயோமுகியைக் கொல்லாமல் விட்டு வந்தபோது, இராமன் 'அவளைக் கொன்றாயோ என்று கேட்டபொழுது, நான் அவள் உறுப்புகளை வெட்டினபொழுது அவள் ஒ என்று கத்தி விட்டாள் என்று கூறிவிட்டு வணங்கி நின்றான். உடனே இராமன் இளையோய்! நீ தான் மனுகுல தர்மத்தைக் காப்பாற்றியவன்' என்று கூறி மகிழ்கிறான். இவ்வாறு சொல்வதால் இராகவனுடைய மனத்தில் தாடகையைக் கொன்ற செயல் ஒரு நெருடலாகவே இருந்து விட்டது என்று தோன்றுகிறது. இலக்குவன் கொள்கை இது என்பதற்கு, மற்றோர் அடையாளம் அவன் சூர்ப்பண கையைக் கொல்லாமல் அவள் மூக்கரிந்து அனுப்பியதே ஆகும். தெய்வப் படைக்கலங்கள் - கவிஞன் குறிப்பு தாடகை வதம் முடிந்த பிறகு விசுவாமித்திரன் பல தெய்வப் படைக்கலங்களை இராமனுக்குத் தருகின்றான். இராகவனும் மகிழ்ச்சியோடு அவற்றை ஏற்றுக் கொண்டான். இராவணிடம் வந்த அந்தப் படைக்கலங்கள், அவன் தங்களைத் தவறான காரியங்களுக்கு ஒரு நாளும் ஏவமாட்டான் என்ற உறுதிப்பாடு காரணமாக அவனை வணங்கி, ஐயனே! உன்னை இணைபிரியாது நிற்கும் இளையவன் போல நின்னிடம் தங்கியிருந்து நின் ஏவலைச் செய்வோம் (39) என்று அவனிடம் அடைக்கலம் புகுந்தன. இந்தக் கருத்தைக் கவிஞன் கூறுவதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் உண்டு. இராமன் வாழ்க்கையில் மட்டுமன்றி, இன்று வாழும் நம்முடைய வாழ்க்கையிலும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தியைக் கவிஞன் இங்கே கூறுகிறான். இக்காலத்தில் தெய்வப் படைக்கலங்கள் என்று சொல்லத்தக்கவை பணமும், அதிகாரமும் ஆகும். இவை ஒருவனிடத்தில் இருந்தால் அவற்றை எவ்வாறு பயன்படுத்த
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/378
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை