பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 38 இராமன் - பன்முக நோக்கில் வேண்டும் என்பதைத்தான் குறிப்பால் உணர்த்துகிறான் கவிஞன். இதே தெய்வப் படைக்கலங்கள் இராவணன், இந்திரசித்தன் போன்றவர்களிடமும் நிரம்ப உண்டு. அவற்றின் அருமைப்பாட்டை அறிந்திருந்தும் அவற்றைத் தங்கள் அதிகார வெறிகட்கு உட்படுத்தித் தவறான காரியங்கட்கே பயன்படுத்தினர். படைக்கலங்கள் பிறருக்குத் தீங்கு செய்கின்றன என்று கூறிப் பயனில்லை. அவற்றைப் பயன்படுத்துபவர்களின் மனநிலையையும் பண்பாட்டையும் பொறுத்தே அவை நலமோ தீங்கோ செய்கின்றன. ஒரே சக்தி வாய்ந்த நான்முகன் படையை இலக்குவன், இந்திரசித்தன் என்ற இருவரும் வைத்திருக்கின்றனர். தேவை ஏற்பட்ட பொழுதுகூட இலக்குவன் அதனைப் பயன்படத்தவில்லை. காரணம், அதனால் எதிரி மட்டும் அழிவதில்லை. பிற உயிர்களும் அழிய நேரிடுகின்றன. ஆதலால் நான்முகன் படையை இலக்குவன் விட்டிலன் உலகை அஞ்சி என்று கவிஞன் பேசுகிறான். ஆனால், அதே படையை இந்திரசித்தன் எவ்வித மனக்கவலையுமில்லாமல் இலக்குவன் மேல் வீசுகிறான். இவற்றைக் கூறுவதன் மூலம் செல்வம், அதிகாரம் என்ற இரண்டையும் படைத்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்; எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை நமக்கு அறிவுறுத்தவே கவிஞன் இதனை விரிவாகப் பாடுகிறான். இப்பொழுது தேவையில்லை என்றாலும் இராம இலக்குவர்க்குப் பின்னர்த் தேவைப்படும் என்ற கருத்தில்தான் விசுவாமித்திரன் பல படைக்கலங்களைத் தந்தான். அரங்கிலிருந்து மறைகிறான் விசுவாமித்திரன் நெடுங்காலமாகக் கல்லாக் கிடக்கிறாள், அகலிகை. அவள் செய்த குற்றத்திற்கு மிக மிக அதிகப்படியாகவே தண்டனை அனுபவித்துவிட்டாள். அவளுக்குச் சாப விமோசனம் எப்படி ஏற்படுமெனக் கூறிய கெளதம முனிவன், 'இராமன் காலடிபட்ட பொழுது சாபம் நீங்கும் என்று