முனிவர்களும் இராமனும் ே 359 கூறிவிட்டான். ஆனால், அவள் கல்லாய்க் கிடக்கும் திசையில் இராமன் வருவதற்கு அந்த முனிவன் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இந்தப் பழைய வரலாற்றை அறிந்த விசுவாமித்திரன் இராமனை அந்த வழியாக அழைத்து வந்து, அகலிகை சாப விமோசனம் அடைய உதவினான். இந்த முனிவன் மிதிலையில் சனகனிடம் பேசியதுபற்றி முன்னரே (பிராட்டியும் இராமனும் கட்டுரை) குறிப்பிட்டுள்ளோம். எந்த ஒரு காரியத்திற்காக விசுவாமித்திரன் தசரதன் அவையில் புகுந்தானோ அதை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டு விசுவாமித்திரன் இராமன் வாழ்க்கையிலிருந்து மறைந்து விடுகிறான். வசிட்டன் தசரதனின் குலகுருவாகிய வசிட்டன் அரசனுக்குத் தேவையான பொழுது அமைச்சர்களோடு உடனிருந்து வேண்டுமானவற்றைச் செய்பவன். முக்காலமும் முழுதுணர் மகா ஞானியாகிய இந்த வசிட்டன் இராமாவதாரம் நடைபெறப் போவதை அறிந்து மகப்பேற்று வேள்வி முதலியவற்றை செய்திட உபகரித்தவன். 'நல்லநாள் குறித்தவன் உண்மையில் தசரதனிடம் குலகுருவாக இருந்த அவன் பரிதாபத்துக்குரியவனாகிறான். இராமனுக்கு முடிசூட்டப் படவேண்டிய முடிவு எடுக்கப்பட்டாலொழிய அவன் வனம் செல்வது இயலாத காரியம். முடிசூட்டிவிழா நடைபெறாது என்று அறிந்திருந்தும், அது நிகழ்வதற்குத் தசரதனுக்கு யோசனை கூறினான். நாள் வைத்துக் கொடுக்க வேண்டும் என்று தசரதன் கேட்டபொழுது நாளையே நல்ல நாள் என்று கூறிமுடித்தான். அவன் நல்லநாள் என்று குறிப்பிட்டதில் தவறு ஒன்றுமில்லை. முடிசூட நல்லநாள் வேண்டுமென்று தசரதன் கேட்க, தேவர்கட்கும் முனிவர்கட்கும் நன்மை தரக்கூடிய நல்ல நாளாகப் பார்த்துக் கொடுத்துவிட்டான். ஒரு மா முனிவன் - திரிகால ஞானி.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/380
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை