முனிவர்களும் இராமனும் 38 36; வசிட்டன் புகட்டிய அரச நீதி முடிசூடல் உறுதி செய்யப் பெற்றவுடன் இராமன் அழைத்து, வசிட்டன் சில நீதிகள் புகட்டுவதாக பதினாறு பாடல்கள் (1412 - 1427) அமைந்துள்ளன. இவற்றுள் ஒரு நான்கைந்து பாடல்கள் மட்டுமே மறுநாள் முடிசூட்டப்படப் போகின்றவனுக்குத் தேவையான, பொருத்தமான அறவுரைகளாகும். பிற பாடல்கள் இந்த இடத்தில் பொருத்தமாகப் படவில்லை. எல்லா ஏடுகளிலும் காணப்பெற்றாலும் இப்பாடல்கள் இடைச் செருகல்களாக இருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. அவற்றுள் காணப்படும் ஒருசில பாடல்களின் பொருள் வருமாறு: "ஒரு தனிமனிதனாகட்டும் அரசனாகட்டும், யாரொடும் மனத்தால் பகைகொள்ளாதிருப்பின், அந்தப் பகை காரணமாகப் போரிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. போர் இல்லை என்றாலும் மன்னனின் புகழ் குறையாது. எனவே, அவனுடைய படை அழிவின்றி இருத்தலின் அவனை எதிர்த்து வருபவர் அழிவர் என்பது உறுதி. (வலுச் சண்டைக்குப் போக வேண்டாம் என்பது குறிப்பு) (1419) "பொறிபுலன்களை அடக்குவதால் வீண்செலவுகள் ஏற்படாது. ஆதலால், அரச வருவாயைப் பெருக்கி அச் செல்வம் செறுநர் செறுக்கறுக்கும் எஃகு ஆதலால், சிறந்த ஆட்சியை மேற்கொள்ள முடியும். இதனைவிடச் சிறந்த தவம் வேறில்லை." (1420) "மும்மூர்த்திகளே ஆயினும் அமைச்சர் சொல்வழி நடப்பதே சிறப்புடையதாகும்." (142) "முனிவர்கள், தேவர்கள் ஆகிய அனைவருக்கும் அவர்கள் வாழ்வு உயர ஆதாரமாக இருப்பது அன்பு ஒன்றேயாகும். இதைவிடச் சிறந்த ஆக்கம் மூன்று உலகத்திலும் இல்லை." (1422) "உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் தன் உயிராகவும், தான் அவ்வுயிர்களைத் தாங்கி நிற்கும் உடம்பாகவும் இருந்து
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/382
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை