362 38 இராமன் - பன்முக நோக்கில் ஆட்சி செய்யும் மன்னன் வேறு எந்த வேள்வியும் செய்ய வேண்டுவதில்லை."(1423) "இன்சொல், கொடைத்திறம், சிந்திக்கும் ஆற்றல், முயற்சி, தூய்மை, சிறப்பு, வெற்றி, நீதிநெறி கடவாமை என்ற இவற்றைத் தன்னுடமையாகப் பெற்ற அரசனுக்கு அழிவே இல்லை." (1424) "நற்பண்புகள் அல்லாதனவற்றை நீக்கி, துலாக்கோலின் நாவைப்போன்று நடுவுநிலைமை நீங்காத மன்னர்க்கு அமைச்சர்களே கண்போன்றவர் ஆவார்.” (425) - மேலே கூறப்பெற்ற கருத்துகள் நாட்டை ஆள்பவனுக்கும் நாடு துறந்து காட்டில் சென்று வாழ்பவனுக்கும் பொருத்தமான அறவுரைகள் ஆகும். இராமனுடைய உடனடி வாழ்க்கை காட்டில்தான் என்பதை வசிட்டன் அறிந்தாலும், அந்தக் காட்டு வாழ்க்கை சாதாரண மனிதர்களுடைய கானக வாழ்க்கை போல் அமையாது. நாட்டு மக்களுக்குப் பதிலாகக் காட்டில் முனிவர்கள் முதலியவர்களைக் காக்கும் பொறுப்பு இராமனுக்கு ஏற்படப்போகிறது. முனிவர்கள்பால் கொண்ட அன்பு காரணமாக அவர்களுக்குப் பகைவர்களாக உள்ள அனைவரும் தனக்கும் பகைவர்கள் என்று அவன் எண்ணிவிடக்கூடாது. காட்டு வாழ்க்கைதானே என்ற எண்ணத்தில் இராமன் அன்பைத் துறந்துவிடக் கூடாது. மனைவியோடு காட்டில் வாழப்போகிறவன் என்றாலும், பொறிபுலன்கட்கு இடம் தந்துவிடாமல் அவற்றை அடக்கி ஆளவேண்டும் என்ற கருத்துகள் குறிப்பாக மேலே உள்ள உபதேசங்களில் அடங்கியிருப்பதைக் காணலாம். ஆறுதல் கூறினான் இதற்கடுத்தபடியாக வசிட்டன், இராமனைச் சந்திக்கின்ற இடம் சித்திரகூடத்திலாம். தாயர் முதலிய அனைவரையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வரும் பரதனுடன் வசிட்டனும் வருகிறான். அங்கு இராமனைச் சந்தித்து, தந்தையை இழந்து வருந்தும் அவனுக்கு அமைதி கூறுகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/383
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை