முனிவர்களும் இராமனும் 38 363 மெளலி சூட்டினான் இதையடுத்து, வசிட்டன் இராம காதையில் தோன்றுமிடம், இராமனின் முடிசூட்டு விழாவில்தான். குலகுரு என்ற முறையில் வசிட்டனே புனைந்தான் மெளலி என்று முடிக்கிறான் கவிஞன். இந்தப் பாடலிலும் யாருக்கு முடிசூட்டினான் வசிட்டன் என்று கவிஞன் கூறவில்லை. "அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண்குடைகவிக்க, இருவரும் கவரிபற்ற, விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன்தங்கள் மரபுளோர் கொடுக்கவாங்கி, வசிட்டனே புனைந்தான், மெளலி. - கம்ப 10327 முடி யாருக்கு? இராமனாக அவதரித்த பரம்பொருள் முடிசூட்டிக் கொண்டு ஆள்வதற்காக வரவில்லை என்பதை மனத்தில் எண்ணி, அந்த முடி இராகவன் தலையில் ஏறாமல் இருக்கத் தொடக்கத்தில் நாள் வைத்துக் கொடுத்தான் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இப்பொழுதும், இராமன் என்ற மனிதனுக்கு முடிசூட்டப் பெறவில்லை. தான் இந்த உலகிடை எதற்காக வந்தானோ, அக்காரியத்தை முடித்த பிறகு தசரதராமன் என்ற தனிமனிதனும் மூல இராமனும் ஒன்றாகிவிடுகிறார்கள். தர்மசொரூபி என்று வடமொழியில் கூறப்படும் அறத்தின் வடிவான ஒருவனுக்கு முடிசூட்டப் பெற்றதென்றால், உலகம் முழுவதற்கும் قی انی பொதுவாகிவிடுகிறது. அடுத்த பாடலின் இறுதி அடி சிந்திக்கத் தக்கதாகும். - "མ་བབསམ་ཡས“ས“ மோலி சூடினான் - கடலின் வந்த தெள்ளியதிருவும், தெய்வப்பூமியும், சேரும்கோளான்." - கம்ப 10328
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/384
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை