முனிவர்களும் இராமனும் ே 367 வாழ்கிறான். எந்தையே! திக்கற்ற எங்கள் இடுக்கண்களை நீக்குவதற்கு உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? நாங்கள் செய்த தவத்தின் பெருமையால் நீ இங்கே வந்திருக்கிறாய். (2645). ஆக, இந்திரனும் உதவ முடியாதபடி அல்லற்படுகின்ற முனிவர்களுக்கு இராமன் ஒருவனே கதி, இப்படி, முனிவர்கள் அனைவர்க்கும் முழுக் காவலனாக இராமன் சித்தரிக்கப்படுகிறான். அருந்தவ முனிவரும் அந்தணாளரும் வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார். - கம்ப 183 எனத் தயரதன் தன் ஆட்சியின் பெருமையை உரைப்பான். தந்தை போலவே முனிவர் வருத்தம் நீக்கும் நிலையை மகனும் ஏற்கிறான். முனிவர்களுக்கும் இராமனுக்கும் இருந்த பொதுநிலை இது. இராமன் முனிவர்களுக்கு உதவியாக அவதரித்தான். அவனுக்கு உதவிய முனிவர்களும் உண்டு. முனிவர்களின் சிறப்பு நிலை அயோத்தி நீங்குமுன் இராமனோடு தொடர்பு கொண்ட முனிவர்கள் வசிட்டனும் விசுவாமித்திரனும் ஆவர். 'வளர்த்தானும் வசிட்டன் (660) என்று சொல்லுமளவுக்கு இராமனின் ஆளுமை வளர்ச்சியில் வசிட்ட முனிவன் இடம் பெற்றான். இவ்வளவு என்று அளவிட முடியாதபடி கரையிலாத மறைகளோடு அளவற்ற கலைகளையும் வசிட்டன் கற்பித்தான் (303). அப்படிக் கற்பித்த வசிட்டனே நின் மகனாகிய இராமனுக்கு அளவில்லாத வித்தை வந்து சேர்கின்ற காலம் வந்திருக்கிறது (329) என்று விளக்கம் சொல் லி விசுவாமித்திரனுடன் கரிய செம்மலை அனுப்பச் செய்கிறான். மறைகளையும் அளவற்ற கலைகளையும் கற்பித்தவன் வசிட்டன். அப்போதும் ஏதோ குறையுள்ளது போலவும்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/388
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை