368 கிே இராமன் - பன்முக நோக்கில் அந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் அளவு இல் விஞ்சை வந்து எய்துகாலம் விசுவாமித்திரனால் வந்திருப்பதாகக் குலகுரு சொல்கிறான். இப்படி, வசிட்டனால் இராமன் விசுவாமித்திரனிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். எனவே, இராமாவதாரத் தொடக்க நிலையில் தசரத ராமனுக்கு உதவி முனிவர்களில் சிறப்பிடத்தைப் பெறுகின்றனர் வசிட்டனும் விசுவாமித்திரனும். தசரத ராமனாக வந்தவன் மூல இராமன். மானிடச் சட்டை பூண்டு தசரத ராமனின் பிறவி நோக்கம் நிறைவேற உதவியவர்கள் பெருமுனிவர்கள் சிலர்; அவர்களில் முதல்வர் இவ்விருவர். மிதிலையிலிருந்து அயோத்தி திரும்பும் வழியில் பரசுராமன் தன் தவப்பயனை யெல்லாம் இராமனிடம் ஒப்படைத்துச் செல்கிறான். கானகம் போந்தபின் சுதீக்கண முனிவன் தன் தவப்பயனையெலாம் இராமனுக்கு வழங்குகிறான்(2661). பரசுராமன் முரண் நிலையில் வந்தானாயினும் தவப்பயன் உதவி மூலராமனின் ஆளுமையை தசரத ராமனுள் ஏற்ற உதவுகிறான். அப்படியே சுதீக்கண முனிவனும் தவப்பயனை உதவி மூல ராமனின் ஆற்றலைத் தசரத ராமனுள் ஏற்றுகிறான். வசிட்டன், விசுவாமித்திரன், பரசுராமன், சுதீக்கனன் போன்றவர்கள் முனிவர்களில் சிறப்பு நிலையினராவர். அந்த வரிசையில் வருவோனே அகத்தியன். அகத்தியன் இராமன் வனம் புகுந்ததிலிருந்து, இராவணனிடம் போர் தொடுக்கும் வரை அந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முனிவர்கள் அவனிடம் வந்து பேசி, அரக்கர்களால் தாங்கள் படும் துன்பத்தை விரிவாக எடுத்துக் கூறினர். ஏறத்தாழ இவர்கள் அனைவருமே இராமன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/389
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை