கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 21 நெடியோன் மய்ங்கி நிலமிசைத் தோன்றி அடல் அருமுந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு - உலக அறவி புக்க காதை 9-13. (நெடியோன் - திருமால் மயங்கு - அவித்தை அடல் அரு முந்நீர் - வலிமை மிக்க கடல் அளக்கர் - கடல்.) * எனவே, சங்கப் பாடல்களில் தொடங்கிய இராம காதை நிகழ்ச்சிக் குறிப்புகள் அவற்றை அடுத்துத் தோன்றிய நூல்கள் பலவற்றிலும் இடம்பெற்றதை அறியமுடிகிறது. என்றாலும், பாரதக் கதை இடம்பெற்ற அளவுக்கு இராமகாதை இடம்பெறவில்லை என்பதும் தெளிவு. சிலப்பதிகார ஆசிரியர் எச் சமயத்தாராயினும் அவர் பிற சமய நம்பிக்கைகளைப் பாடும் பொழுது அச் சமயத்தார் கொள்கைக்கு முரண்படாதபடி பாடியுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் காலத்தில் இராமன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து வலுப் பெற்றிருந்தமையின் தாதை ஏவலின் என்ற பகுதியில் காடு சென்ற இராமன் வேத முதல்வனாகிய நான்முகனைப் பயந்த திருமாலே என்று கூறுகிறார். பின்னர் வந்த மணிமேகலை ஆசிரியரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதை மறுக்கவில்லை. அவர்காலச் சூழ்நிலை, நம்பிக்கை என்பவற்றைப் பின்பற்றி மறைக்காமல் கூறிவிடுகிறார். ஆனால், திருமால் மனிதனாகப் பிறந்தது அவருடைய கருணையால் என்பதைக் கூற அந்தச் சுருங்கிய மனமுடைய பெளத்தருக்கு ஏற்கவில்லை. எனவேதான், மயக்கத்தினால் (அவித்தையால்) நெடுமால் இராமனாகப் பிறந்தான் என்று கூறுகிறார். அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளை நீக்கிவிட்டுக் கண்டால் ஒரு கருத்து உறுதிப்படுகிறது. இராமன் திருமாலின் அவதாரம் என்பதை ஏறத்தாழச் சங்க காலத்திலிருந்தே இத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுவந்துள்ளனர் என்பதே அக் கருத்தாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை