பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிவர்களும் இராமனும் ே - 369 இன்னான் என்பதை ஒரளவு அறிந்திருந்தனர் என்று நினைப்பதற்கு இடமுண்டு. என்றாலும், மானுட வடிவில் மனைவியோடு காட்டில் வாழும் அவனுடைய நலந்தீங்குகளில் பங்குகொண்டதாகத் தெரியவில்லை. வந்தவர்கள் அனைவரும் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவும், மோட்சத்திற்கு வழிதேடவும்தான் வந்தார்களே தவிர, இராமனைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டத்தில் நான்கு பெரியவர்கள் இவர்களினின்றும் மாறுபட்டிருப்பதைக் காணலாம். வசிட்டன், விசுவாமித்திரன், பரத்துவாஜன், அகத்தியன் என்ற நால்வரும் இராமன் இன்னான் என்பதை நன்கறிந்திருந்தாலும், அவனுடைய மனித வேடத்திற்கு ஏற்ப அவனிடம் பரிவு காட்டிப் பழகுதலையும், அவனுக்கு வேண்டுமானவற்றைச் செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் நால்வரும் அவன் பரம்பொருள் என்பதை அறிந்திருந்தாலும், அவன் ஏற்று நடிக்கும் இந்த நாடகத்தில் அவனை மனிதனாகவே மதித்து நடக்கின்றனர். வசிட்டன் அரசியல் பற்றி உபதேசம் செய்தது, விசுவாமித்திரன் தாடகையைக் கொல்வது நியாயம் என்று வலியுறுத்தியது, தெய்வப்படைக் கலங்கள் தந்தது ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும். தண்டகாரணயத்தில் பத்து ஆண்டுகளைச் செலவழித்து விட்ட இராகவன் இன்னும் தெற்கே செல்ல விரும்பிப் புறப்பட்ட சமயத்தில் வழியில் வழக்கம்போலப் பல முனிவர்களையும் சந்தித்து விட்டு, இறுதியாக அகத்தியன் ஆசிரமம் வந்து சேர்கிறான். அந்தச் சந்திப்பை கவிஞன் மிக அழகாகப் பின்வருமாறு கூறுகிறான்: "கண்டனன் இராமனை வர கருணை கூர, புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய, நின்றான் - எண்திசையும் ஏழ்உலகும் எவ்உயிரும் உய்ய, . குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான்." - கம்ப 2676 கூ.2.4