370 ேே இராமன் - பன்முக நோக்கில் “நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான், அன்று, அவனும் அன்பொடு தழிஇ அழுத கண்ணால், 'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்என்றும் உள. தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்." - கம்ப 2677 இந்த இரண்டு பாடல்களில் சில நுட்பமான கருத்துகளைக் கவிஞன் பேசுகின்றான். தன் கமண்டலத்திலிருந்து காவிரிப்பாவையை வெளிவிட்டவன் அகத்தியன் என்பது பழைய புராணக் கதை. இத்தகைய அருஞ் செயலைச் செய்த அகத்தியன், எதிரே இராமன் வருகிறான் என்று அறிந்து கண்ணிர் பொழிய நின்றுவிட்டான். "இராமனை வரக் கண்டவன் அதியை உபசரிக்க வேண்டிய கடப்பாடுடையவனாகிய அகத்தியன் - சில அடிகள் துரம் முன்னே சென்றல்லவா இராமனை வர வேற்றிருக்க வேண்டும்? அவ்வாறு செய்யாமல் இராமன் வரக் கண்டனன் நின்றான்' என்று பாடுவதால் ஏதோ ஒரு காரணம் பற்றி அகத்தியன் முன் சென்று வரவேற்கவில்லை. நீர் பெரிய கண்ணினனாய் நின்ற விடத்திலே நிற்க, இராமன், தம்பியுடனும், மனைவியுடனும் வந்து முனிவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அவனை மார்புறத் தழுவிக் கொண்டான் கடலைக் குடித்து உமிழ்ந்தவனாகிய அகத்தியன். தான் எடுத்த வடிவிற்கேற்ப அகத்தியன் போன்ற முனிவர்களை அடிகளில் வீழ்ந்து வணங்கும் செயலை மேற்கொள்ளுகிறான் இராகவன். அகத்தியனைக் குறிப்பிட வந்த கம்பன் தமிழ் மொழியையே உலகிற்கு வழங்கினான் என்று ஏனைய கவிஞர்கள் போல் கூறாமல், என்றுமுள் தென் தமிழ் என்று குறிப்பிடுவது கம்பனுடைய அறிவு நுணுக்கத்திற்கும், தாய்மொழிப் பற்றுக்கும் எடுத்துக்காட்டாகும். இயம்பி இசை கொண்டான்' என்பதனால் தமிழை வளர்த்ததால் தனியாக ஒரு புகழைப் பெற்றான் அகத்தியன் என்றும் கூறுவதைக் dossor Gufrit).
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/391
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை