372 38 இராமன் - பன்முக நோக்கில் வில் முறிந்துவிட, இராமன் இடது கையைப் பின்புறம் நீட்டவே வருணன் இந்த வில்லைத் தந்தான் என்றும், அதைக்கொண்டே கரனை வென்றான் என்றும் காப்பியம் சொல்லிச் செல்கின்ற முறையில், அகத்தியன் தந்த வில் எது என்ற வினாத் தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தைக் கருதியே கவிஞன் முழுமுதல்வன் வில்' என்று கூறிவிட்டான். அகத்தியன் சொல்வதைப் பார்த்தால், சிவதனுசு, விஷ்ணு தனுசு ஆகிய இரண்டையும்விட மேலான வில் ஒன்று இருந்திருக்குமோ என்று ஐயுறத் தோன்றுகிறது. பரத்துவாசன் "எல்லையற்ற அன்பு நிறைந்தவனாய், விம்முகின்ற மனம் உடையவனாய் உள்ள பரத்துவாசன் தான் இத்தனை நாட்கள் செய்த தவத்தின் பயன் இப்பொழுது பலித்துவிட்டது என்றும், பிறவிப் பிணியைப் போக்கும் மருத்துவன் வந்து கொண்டிருக்கிறான் என்றும் நினைத்து இராகவனை வரவேற்கச் செல்லுகிறான்" (2018). "குடை, தண்டம் முதலியவற்றை உடையவனும், கமண்டலத்தைத் தாங்கியவனும், சடை முடியை உடையவனும், அழகிய மரவுரி ஆடையை உடுத்தியவனும், மான் தோலைப் போர் த்தியவனும், நல்லொழுக்கம் உடையவனும், ஒயாது வேதங்களை உச்சரிக்கின்ற நாவினை உடையவனும் ஆகிய முனிவனே பரத்துவாசன் ஆவான்" (2019). 'நான் முகன் படைத்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றையும் தன்னுயிர் என மதித்துப் போற்றும் செந்தண்மைப் பூண்ட அந்தணன் ஆவான் இவன். ஏழுலகங்களையும் படைக்க வேண்டும் என்றால், திருமாலின் உந்தியில் தோன்றிய நான்முகன் உதவியில்லாமல் தானே படைக்கும் ஆற்றல் உடையவன் இவன்.” (2020) 'இப்பாடல் தொல். பொருள். மரபு 71 நூலே கரகம் என்ற சூத்திரத்தையும், எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநிழல் என்ற ாலைக்கலிப்பாடலையும் (பாலைக்கலி 8) மனத்துட்கொண்டு பாடியதாகும்)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/393
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை