முனிவர்களும் இராமனும் ே 373 இராமன் வனம் வந்த காரணத்தை முனிவன் கேட்டதாகப் பாடிய கம்பன், அந்த விளக்கத்தை இராமனே தருவதாகப் பாடியுள்ளான். ஆனால், இராமன் என்ன கூறினான் என்று விளக்கம் தராமல் நடந்தவற்றை அப்படியே கூறினான்' என்றும், அதனைக் கேட்ட முனிவன் இப்பூமிதேவி உன்னைப் பெறுவதற்குத் தவம் புரிந்தும், உன்னால் ஆளப்படுதற்குத் தவம் செய்யவில்லையே என்று கூறிவிட்டு, "தந்தை, தாய் யார்மேலும் சினம் கொள்ளாதே' என்று கூறுபவன் போல் விதி செய்த குற்றமாகும் என்ற பொருளில் 'விதிதரு நவை என்று முடித்தான். அடுத்து இராமனுக்கு விருந்துபசாரம் செய்து, சித்திர கூடம் செல்லும்படிக் கூறினான். - வனம் போந்த காரணம் - இராமனே சொல்லும் இடம் இராமன் வனம்புகுந்த காரணத்தைக் குகன், அனுமன், சுக்கிரீவன் ஆகியோரிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் இளவலை விட்டு அவர்கட்கு விளக்கம் கூறச் சொன்னானே தவிர, இராகவன் தன் வாய்திறந்து ஒரு சொல்லையும் சொல்லவில்லை. ஆனால், மாமுனிவனாகிய பரத்துவாசன் கேட்ட பொழுதுமட்டும் இளைவலை விட்டுப் பதிலிறுக்கச் சொல்லாமல் இராகவன் தானே விடை கூறியது பெரியோர்களை, முனிவர்களை, அப்பெருமான் எவ்வளவு மதித்தான் என்பதற்கு எடுத்துக் காட்டாகும். முதலிலும் முடிவிலும் பரத்துவாசன் இராகவன் வனம் புகுந்தபொழுது முதலில் சந்தித்தது, பரத்துவாசமுனிவனையே யாகும். அதேபோலப் பதினான்கு ஆண்டுகள் கழித்து, இராவண வதம் முதலிய செயல்களை நிகழ்த்தி விட்டுப் பிராட்டி, இளையவன் ஆகியோருடன் திரும்பும் இராகவன் நேரே அயோத்தி செல்லாமல் பரத்துவாச முனிவனை வணங்கி அவன் ஆசிபெற்றுச் செல்ல, அம்முனிவன் ஆசிரமத்திற்கு வருகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/394
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை