பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 38 இராமன் - பன்முக நோக்கில் இராமன் வரவை அறிந்த பரத்துவாசன், குண்டிகை தண்டம் முதலியவை தாங்கிக் கொண்டு நடந்து வருவதை கற்பனையில் காண்கிறான் கவிஞன். மாதவப் பயன், உருவு கொண்டு எதிர் வந்தாற்போல் வருகின்ற முனிவனை இராகவன் கண்டான் என்று பாடுகிறான் (10132). தொடக்கத்தில் பரத்துவாசனை அறிமுகம் செய்துவைக்கையிலும் கமண்டலம், தண்டு என்பவற்றோடு அறிமுகம் செய்ததை மறந்துவிடாமல் ஏழாயிரம் பாடல்களும், பதினான்கு ஆண்டுகளும் கழிந்த பிறகும் அதே முறையில் அம்முனிவனை வருணிப்பது கம்பனுக்கே உரிய தனிச் சிறப்பாகும். முனிவன் மாதவத்தின் பயன் வடிவு கொண்டதை ஒத்துள்ளான். அவனைக் காண்கிறவன் யார்? அவரவர் செய்த தவத்தின் அளவும், தன்மையும் அறிந்து அதற்குரிய பயனை அவரவர்க்கு வழங்கும் தலைவனாகவும், மூலப்பொருளாகவும் உள்ளவன், இந்த முனிவனைக் காண்கிறான் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறான் கம்பன். நோக்கினன், நெடியோன்" என்ற தொடரில் நெடியோன் என்ற சொல் வெறும் உயரத்தையும், ஆஜானுபாகு என்ற பொருளையும் மட்டுமே தராது; யாவற்றினும் உயர்ந்தவன், அதாவது உயர்வுஅற உயர்நலம் உடையவன்' என்ற மாறன் சடகோபப் பெருமானின் திருவாய்மொழி முதற் பாடலைப் படித்ததால் இந்தப் பொருளுடன், இந்தச் சொல்லை, அதாவது நெடியோன் என்ற சொல்லைக் கவிஞன் இங்கே பயன்படுத்துகிறான். நெடியோன் என்ற சொல்லை இராம காதையில் பலவிடங்களிலும் கவிஞன் பயன்படுத்தியுள்ளான் என்றாலும், இங்கே அச்சொல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. மாதவப்பயன் உருவாக விளங்கும் ஒருவனின் எதிரே யார் நிற்க முடியும்? உயர்வு அற உயர்ந்துள்ள ஒருவன்தான். நெடியோன் யார்? 'உன்னும் மாத்திரத்து (10134) என்ற பாடலில் புட்பகத்திலிருந்து இறங்கிய இராமன், நேரே சென்று