முனிவர்களும் இராமனும் 38 % 375 முனியுங்கவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் என்கிறான் கவிஞன். மாதவத்தின் பயனை நெடியோன் நேரே கண்டான்' என்று சென்ற பாடலில் குறிப்பிட்டு விட்டு, இப்பொழுது இராகவன் முனிவன் திருவடிகளில் விழுந்து வணங்கினான் என்றால் எப்படிப் பொருந்தும் என்ற ஐயம் சிலருக்குத் தோன்றும். ஆழ்ந்த நோக்கினால், அந்தப் பாடலில் குறிப்பிடப்பட்ட பொருள் பருப்பொருளான இரண்டு மனிதர்களைக் குறிக்காமல், இரண்டு பண்புகளைக் குறித்தது. மாதவத்தின் பயன் என்பது ஒரு பண்பு, நெடியவன் என்பது ஒரு பண்பு. தவப்பயன் என்ற பண்பு குண்டிகையும் தண்டும் தாங்கிய முனிவனின் உள்ளே பிறர் அறியாமல் உறைகின்ற ஒரு பண்பு. அதேபோலத் தசரதராமன் என்பவன் வடிவில் உயர்வற உயர்ந்து நிற்கும் நெடிய பண்பு மறைந்து நிற்கின்றது. மறைந்து நிற்கும் இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பதாகச் சென்ற பாடலில் கூறினான். இப்பாடலில் அப்பண்புகள் மறைந்துள்ள பருப்பொருட்களைக் கூறுகிறான். முனிவனை இராமன் வணங்கினான் என்பதன் பொருள் இதுவாகும். மூவுலகையும் படைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ள ஒருவனை அரசகுமாரன் ஒருவன் வணங்குவதும், அ வ் வணக்கத்தை முனிவன் ஏற்றுக்கொள்வதும் நியாயமானதே ஆகும். அடுத்த பாடல் நம் சிந்தனைக்குரியதாகும். "அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அனைத்து, முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன் சடில நீள்துகள் ஒழிதர, தனது கண் அருவி நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன்". . கம்ப 10135 இப்பாடலுக்குப் பொருள் செய்கையில், இறுதி அடியில் 'கலசம் அது ஆட்டினன், நெடியோன்" என்று வரும் பகுதிக்குத் 'தன் கண்ணிரால் நனைத்தான் பரத்துவாசன்' என்று பலரும் பொருள் கூறியுள்ளனர். இப்பாடலில் முனிவன் என்ற தோன்றா எழுவாயை வருவித்துக் கொண்டால், நெடியோன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/396
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை