முனிவர்களும் இராமனும் 38 377 பெறுகின்றது. அவதாரம் என்ற சொல், மேலிருந்து கீழே இறங்குதல் என்ற பொருளைத் தருவது போல நெடியோன் முனிவன்) அடியில் வீழ்ந்தான் என்ற சொற்றொடர் 'இறப்ப உயர்ந்ததாகிய அப்பரம்பொருள், அதனுடைய இயல்பான எளிவந்த தன்மை (செளலப்பியம்) காரணமாக முனிவன் அடியின் வீழ்தலும், அதன் அருமைப்பாட்டை அறிந்த முனிவன் அதனை எடுத்து மார்போடு அணைத்து, கண்ணருவியில் தோய வைக்கிறான் என்ற கருத்தும் படவே கவிஞன் நெடியோன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான் என்று கொள்வதிலும் தவறில்லை. பரத்துவாசனுக்குப் பரதன் நினைப்பு ஏன்? "உடன்வந்த பிராட்டி, இளையோன், வீடணன், சுக்கிரீவன் ஆகிய அனைவருக்கும் பரத்துவாசன் ஆசி வழங்கினான். அடுத்து, இராகவனைத் தன்னுடன் அங்குத் தங்கி உணவருந்திவிட்டுச் செல்லுமாறு முனிவன் வேண்டிக் கொள்ள, இராகவன் இசைந்தான். இந்தப் பகுதியில் எவ்விதக் காரணமுமின்றித் திடீரென்று இந்தப் பதினான்கு ஆண்டுகளும் பரதன் எவ்விதம் வாழ்ந்தான் என்பதை முனிவன் இராமனுக்கு ஏன் சொல்ல வேண்டும்? என்ற வினா தோன்றுகிறது. அந்த இரண்டு பாடல்களிலும் அரசபோகங்கள் அனைத்தையும் துறந்து, இந்திரியங்களை அடக்கி நாட்டிடை வாழும் ஒரு முனிவனாகவே பரதன் வாழ்ந்தான். (10143, 10144) என்று இரண்டு பாடல்களில் முனிவன் குறிப்பது ஏன் ? பரதனின் பண்பு நலன்களை அறியாதவனல்லவே இராகவன் அப்படியிருக்க முனிவன் ஏன் இதனைக் கூற வேண்டும்? சிந்திக்கும்பொழுது, ஒரே ஒரு காரணம் தான் தோன்றுகிறது. காட்டிலும் போர்க்களத்திலும் பதினான்கு ஆண்டுகளைக் கழித்த இராகவன் திதி, நாள், நட்சத்திரம் என்பவற்றைக் கணித்து இன்றுடன் பதினான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன என்பதை அறிய வாய்ப்பில்லை. அதைக் குறிப்பாக நினைவூட்டு வதற்காகவே முனிவன் பரதனை நினைவூட்டினான் என்று
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/398
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை