378 ேே. இராமன் - பன்முக நோக்கில் கொள்வதில் தவறில்லை. குறிப்பில் குறிப்புணரும் தசரத குமாரன் இதனை நன்கு புரிந்துகொண்டு உணவுக்காகக் காத்திருக்கின்ற நேரத்தில் இன்றே தான் வந்து விடுவேன்' என்பதைப் பரதனுக்கு அறிவிக்குமாறு அனுமனுக்கு ஆணையிட்டான். இதனைப் பின்வரும் பாடலில் கவிஞன் கூறுகிறான்: "இன்று நாம் பதி வருதுமுன், மாருதி ஈண்டச் சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி நின்ற காலையின் வருதும் என்று ஏயினன், நெடியோன்; 'நன்று எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான்." - கம்ப 10151 முனிவன் கூறிய பிறகுதான் அன்றுடன் பதினான்கு ஆண்டுகள் முடிவதை இராகவன் நினைவுகூர்கிறான். அதுமட்டுமன்று, அன்று வரவில்லையானால் தீப்புகுவேன் என்று பரதன் கூறியதும் நினைவுக்கு வர அதைத் தடுக்க வல்லவன் அனுமன் ஒருவனே என்ற கருத்தில் 'நீ சென்று எனக்கு எவ்விதத் தீமையும் இல்லை, வருகிறேன் என்று கூறுவதடன், அத்தீமையும் விலக்கி அங்கே நிகழப்போகின்ற தீயினால் விளையும் தீமையையும் போக்கி அறிவுறுத்துவாயாக' என்று சொல்லி அனுப்புகிறான். பரத்துவாசன் தனிநிலை வசிட்டன், விசுவாமித்திரன் போன்றவர்கள் பரத்துவாசனைப் போன்றே ஈடு இணையற்றவர்கள் ஆயினும் அரசர், மக்கள் என்பவர்களோடு கலந்து உறவாடி வாழ்ந்தவர்களாவர். அவ்வித பிரச்சனை ஒன்றுமில்லாமல் வனத்திடை சுயம்பிரகாசமாக வளரும் ஒரு முனிவன் எப்படி இருப்பான் என்பதை அறிவுறுத்தவே வனம்புகு படலத்திலும், மீட்சிப் படலத்திலும் பரத்துவாச முனிவனை இவ்வளவு அழகாகவும் விரிவாகவும் வரைந்து காட்டுகிறான் என்று நினைப்பதில் தவறில்லை.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/399
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை