22 38 இராமன் - பன்முக நோக்கில் ஆழ்வார்களின் முற்பட்ட கருத்து இத்துணை விரிவாக இதனைக் கூறுவதற்குக் காரணம் உண்டு. வான்மீகி கூறிய மனித இராமனைத் தெய்வமாகக் கம்பன் கூறுவதற்கு முக்கியமான காரணம் ஆழ்வார்களின் பாடல்களே என்று சிலர் இன்றும் கூறுகின்றனர். இராமன் திருமால் அவதாரம் என்பது ஆழ்வார்கள் காலத்தில் புகுத்தப்பட்ட புதுமையான கருத்து என்பது இவர்களுடைய நம்பிக்கை. இது சரியன்று. முதலாழ்வார்கள் தோன்றும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் எட்டு நூற்றாண்டுகள் முற்பட்ட சங்கப் பாடல்களிலும், ஐந்து நூற்றாண்டுகள் முற்பட்ட சிலம்பிலும், மூன்று நூற்றாண்டுகள் முற்பட்ட மணிமகலையிலும் இராமன் திருமாலின் அவதாரம் என்று பேசப்படுகிறது. இக் கருத்து இத் தமிழ் நாட்டில் புதிதாக நுழைந்ததன்று. வான்மீகத்தை அடுத்த காலத்திலேயே தமிழகத்தின் இராமகாதை புழக்கத்தில் இருந்தது என்பதை அறிதல் வேண்டும். மேலும், இராமனைப் பற்றிக் கூறவந்த சிலம்பு, இராமன் நான் முகனைப் பயந்த திருமாலே என்று கூறுவதுடன் அமையாது இக் கருத்து நெடுமொழி என்று கூறுவதால் இராமன் திருமாலே என்ற கருத்து கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழகத்தில் வழங்கிவந்தது என்பதை அறிகிறோம். கம்பநாடன், இராமனைத் திருமாலின் அவதாரம் என்று கூறுவதற்கு இந்நெடுமொழிகள் பயன்பட்டிருக்க வேண்டும். வான்மீகியைக் கம்பன் பின்பற்றியது எந்த அளவில்? வான்மீகியைப் பொறுத்தவரை இன்றுள்ள ஏழு காண்டங்களில் உத்தரகாண்டம் அவருடையதன்று என்று முற்றிலுமாக ஒதுக்கிவிடப்பட்டது. இராமாயண அறிஞர்கள் "வால்மீகி - பாலகாண்டம் 18ஆவது சருக்கம் 9,11,12 (Arsha Vidya Ashram - Gurukulam, Coimbatore - 1992 Edition)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை