முனிவர்களும் இராமனும் 38 : 379 முடிவாக இராம அவதாரத்தின் நோக்கம் இன்னது என்பதை 'அறம் தலைநிறுத்தி (5855) என்ற பாடலில் கம்பன் விளக்குகிறான். தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் துயர் துடைத்து ஏக வந்தவன் இராமன். இந்த இருவகைப் பணியில் தீயோர் இறந்து உக நூறுவதற்குச் சில முனிவர்கள் உதவியிருக்கிறார்கள். வசிட்டன், விசுவாமித்திரன், பரசுராமன், அகத்தியன், சுதீக்கணன் போன்ற முனிவர்கள் மூல இராமனின் ஆளுமையைத் தசரதராமனின் உள்ளகத்து ஏற்ற உதவியிருக்கிறார்கள். இவர்கள் சிறப்பு நிலை முனிவர்கள் எனக் கொள்ளத் தக்கவர்கள். இராமன் கானகம் வந்தான் என்றபோதே எங்கள் செல்கதி வந்தது (1935) என முனிவர்கள் மகிழ்கிறார்கள். தக்கோர்துயர் துடைக்க வந்த அவதாரத்தை நினைந்து கொண்ட மகிழ்ச்சி இது. ஆரணிய காண்டத்திலேயே அத்திரி முனிவன் முனிவர்களுக்கு உதவ வந்த நிலையைப் புலப்படுத்துகிறான் (2513), இந்தக் குழுவிலே வருகின்ற முனிவர்கள் கணக்கிலர். பெயர்கூடப் புலப்படாத பல முனிவர்களின் துயர் துடைப்பதன் வாயிலாக இராமன் முனிவர் கூட்டத்தோடு தொடர்பு கொள்ளுகிறான். 'முனிவர்கள் . பொதுநிலை, முனிவர்கள் - சிறப்பு நிலை' என்ற முறையில் இக்கட்டுரையில் இவர்களைப் பற்றி ஒரளவு கூறப்பட்டுள்ளது. ஆக, இராமாவதார நோக்கை, இரண்டு நிலைகளில் அமைந்து முனிவர்கள் நிறைவு செய்கிறார்கள் என்று கூறுதல் அமைவுடைத்து.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/400
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை