11. அரக்கர்களும், இராமனும் தேவர் அனையர் அரக்கர் தேவர்கட்கும் முனிவர்கட்கும் இடுக்கண் செய்வதில் மகிழ்ச்சி அடையும் அரக்கர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். அவர்களுள் பெரும்பாலோர் மாபெரும் தவங்கள் செய்து தேவர்களைப் போலவே தெய்வப் படைக்கலங்களைப் பெற்றிருந்தனர். தேவர்கள், அரக்கர்கள் என்ற இரு கூட்டத்தாரும் சம்பலம் பெற்றிருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. செய்தக்க அல்ல செய்பவர் அரக்கர்களைப் பொறுத்தமட்டில், காரணமின்றிப் போர் தொடுப்பது என்பது அவர்கட்கு இயல்பாக அமைந்துவிட்டது. மேலும், தெய்வம் படைக்கலங்களை அவற்றின் அருமை பெருமை பாராமல் யார்மேல் வேண்டுமானாலும் பயன்படுத்தினர். இதற்கு உதாரணம் தேடி அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. மாபெரும் வலிமை படைத்த இராவணனேகடிட அப்படிப் பயன்படுத்தினான். எத்தகைய எதிரியையும் வீழ்த்தக்கூடியதும் சிவபெருமான் கொடுத்ததும் ஆகிய சந்திரஹாசம் என்னும் வாளைச் சடாயுவை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தினான். அவன் மகன் இந்திரசித்தன் நாகபாசத்தையும், பிரமாத்திரத்தையும் இலக்குவன் மேல் பயன்படுத்தினான். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு மலையைத் துக்கி எலியின் மேல் போடுவது போன்ற பயித்தியக்காரத்தனமான செயல்களைச் செய்வதில் அரக்கர்கள் சூரர்கள். இராவணனுக்குக் கிடைத்த சந்திரஹாசம் ஒரே ஒரு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/401
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை