அரக்கர்களும் இராமனும் 38 38t முறைதான் பயன்படும். இதனைக் கொடுத்த இறைவன் தேவையில்லாமல் அதனைப் பயன்படுத்தி அந்தப் பேராற்றலை வீணடிக்கும் அறிவையும் இவர்கட்குத் தந்து விட்டான். இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பாரதத்திலும் காணப்படுகின்றது. கர்ணனிடம் இருந்த பாசுபதக் கணை அருச்சுனனுக் கென்றே வைக்கப்பெற் றிருந்தது. அதனைக் கர்ணன் பயன்படுத்தினால் அருச்சுனனைக் காப்பது கடினம் என்ற உண்மை பகவான் கிருஷ்ணன் ஒருவனுக்குமட்டுமே தெரியும். எனவே, யுத்த தர்மத்திற்கு மாறாகக் கடோத்கஜனைக் கொண்டு இரவுப்போரைத் தொடங்கச் செய்தான். பொழுது விடிவதற்குள் கடோத்கஜன் ஒருவனே தன் சேனை முழுவதையும் அழித்துவிடுவான் என்று அஞ்சிய துரியோதனன் கர்ணனிடம் சென்று பாசுபதத்தைப் பயன்படுத்துமாறு வேண்டினான். அதன் அருமை பெருமைகளை எடுத்துக் கூறிய கர்ணன், அது அருச்சுனனுக்கென்றே வைக்கப் பெற்றிருக்கிறது என்றும், அதனை ஒரே ஒரு முறைதான் பயன்படுத்த முடியும் என்றும் எவ்வளவு மன்றாடியும் துரியோதனன் கேட்கவில்லை. இறுதியாக, அதனை ஏவிக் கடோத்கஜனைக் கொன்றான் கர்ணன். எத்தனை வரபலம், தெய்வபலம், தவபலம், ஆயுதபலம் பெற்றிருந்தாலும் இறையருள் துணை இல்லாதபோது இவை அனைத்தும் பயனற்றுப் போகின்றன. இராமன் தனி நின்று போர் செய்த நிலைகள் இராமகாதையில், இராமனை அன்றி இலக்குவன், அனுமன், சுக்கிரீவன், அங்கதன், நீலன் முதலிய பலரும் போரில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் இராவணனோடு போர் நிகழும்பொழுது, இராகவன் நேரிடையாகப் போரிட்டது இருவரிடம்தான். ஒருவன் கும்பகர்ணன், மற்றவன் இராவணன். இந்தப் போர் தவிர இலங்கை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/402
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை