அரக்கர்களும் இராமனும் 38 383 போர்களில் விஷ்ணுவின் வில் தேவைப்படும்; ஆதலின், இராமன் கையிலிருந்த வில் ஒடிய, பரசுராமன் கொடுத்த அந்த வில்லை வருணன் இப்பொழுது இராமனுக்கு அளித்தான். இந்தப் போரின் தனித்தன்மை என்னவென்றால் கரன் முதலியவர்கட்கு அறிவு தொழிற்பட்டதாகவே தெரியவில்லை. தம் வலியை மட்டும் நம்பிக்கொண்டு, மாற்றான் வலியை அறிந்து கொள்ள முடியாத அறிவிற் குறைந்தவர்கட்கு எடுத்துக்காட்டாக நின்று அழிகிறான் கரன். இந்தப் போரைத் தனக்களிக்குமாறு வேண்டிக் கொண்ட இளைய பெருமாளை நோக்கிப் பெரிய பெருமாள், "நீ உன் அண்ணியைக் காவல் செய்துகொண்டிரு. நான் சென்று இவர்களை அழித்து வருகிறேன்" என்று கூறிச் செல்கிறான். இதனெதிராக, அதிகாயனுடைய சிறப்பையெல்லாம் கூறி, "நீயே அவனுடன் போர்புரிய வேண்டும், உன்னால் கொல்லப்பட்ட கும்பகர்ணனைவிட இவன் எவ்விதத்திலும் தாழ்ந்தவன் அல்லன். எனவே, இவனுடன் நீ போர்புரிதலே முறை” என்று வேண்டிக்கொண்ட வீடணன் வேண்டுகோளை மறுத்து, "வீடனா! நீ என் தம்பியின் போர்த்திறத்தை அறிய வாய்ப்பில்லை. எத்தனை இராவணர்கள் ஒன்று கூடினாலும் அவனை எதிர்க்க முடியாது. நீயே சென்று அவன் போரை நேரில் காண்பாயாக’ என்று கூறினான் இராகவன். கர, துடனர் போரின் போது இலக்குவன் வேண்டிக் கொண்டபோது அதை மறுத்த இராகவன், அவன் அதிகாயன் போரை வேண்டும் என்று கேட்காதபோது, இலக்குவனுக்குக் கொடுத்ததன் அடிப்படை என்ன என்பதைச் சிந்தித்தால், ஒர் உண்மை உடனே விளங்கும். வருணன் பால் கொடுத்துவைத்திருந்த விஷ்ணு தனுசைப் பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிந்த மூலஇராமன் இலக்குவனை மறுத்து, கரன் வதைக்குத் தசரதராமனை மட்டும் தனியே அனுப்புகிறான். வருணன் தந்த வில்லை இராமன் வாங்குவதை யாரும் காணக்கூடாது என்பதே மூல
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/404
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை