பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 38 இராமன் - பன்முக நோக்கில் இராமனின் கருத்துப்போலும். கரனைப் பொறுத்தமட்டில் அறிவு விளக்கம் பெறாமல் மாபெரும் வன்மை மட்டும் பெற்ற அரக்கன் என்று அறிய முடிகிறது. கும்பகர்ணன் இலங்கைப் போரில் முதற் போருக்கு அடுத்தபடியாகக் கும்பகர்ணன் ஒருவனிடம் மட்டுமே இராமன் நேரடிப்போரில் ஈடுபடுகிறான். பெருந்துக்கத்தில் ஆழ்ந்தவனாயினும் பெரும் தவவலிமையோடு சிறந்த அறிவு விளக்கம் பெற்றவன் கும்பகர்ணன். இராவணனுக்கு அறவுரை கூறும் பொழுது அறிவுத் தெளிவோடு மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்துப் பேசுபவன் கும்பன் ஆவான். இராவணன் மந்திராலோசனை சபையில் கும்பகர்ணன் பேசும் தெளிவான வாதங்கள் அவனுடைய கல்விச் சிறப்பையும் அறிவுத் திறத்தையும் நன்கு வெளியிடுகின்றன. இராவணனை நோக்கி அவன் கூறுவன: ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய், தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்; ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ? - கம்ப 6118 as 'n gess sasa assassmm sans வேறு ஒரு குலத்தோன் தேவியை நயந்து, சிறை வைத்த செயல்நன்றோ? பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ? - கம்ப 819 "என்று ஒருவன் இல்உறை தவித்தியை... աւա-ա.................ա.ա... சிறை வைத்தாய், அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ், ஐயா!