386 38 இராமன் - பன்முக நோக்கில் இனி அடுத்தபடியாக உறங்கும் அவனை எழுப்பி, போருக்குச் செல்லுமாறு பணிக்கிறான் இராவணன். போர் மூண்டதை அறிந்த கும்பன் பேசும் பேச்சுக்கள் இராமனை இன்னான் என்று கும்பன் அறிந்தேயிருந்தான் என்பதை நன்கு வெளிப்படுத்துகின்றன. "வெஞ்சமம் தொடங்கி விட்டதோ சானகி துயர் இன்னும் தீரவில்லையோ? வையம் முதல் வானம் வரைதானாக வளர்ந்த புகழ் அழியவும், நமக்கும் நாசம் வந்துற்றதோ?" (7350) "பெருவலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது சீதை மேனியை நீ புல்லலாம் என்பது போலத்தான்." (7352) "நீயே இந்திரனுக்கு வெற்றி தேடித் தந்து விட்டாய். உன் சுற்றம் கிளை ஆகிய அனைவரையும் ஒழித்து விட்டாய். நீயும் ஒழிந்தாய். நீ ஒருவனே இத்தனையும் செய்து முடித்தாய்.” (7354) “வந்தவர்களுக்குத் தஞ்சம் கொடுப்பதும், தருமத்தைக் காப்பதும், பண்புடைமையும் அவர்கள்பால் நின்றுவிட்டன. இதற்கு நேர்மாறான வஞ்சனை, பொய், பாவம் என்பவை நம்மாட்டுள்ளன. வேறு என்ன முடிவை நீ எதிர்பார்க்கிறாய்?" (7356) மேலே கண்டவற்றை ஆழ்த்த சிந்தனையோடு கூறிய கும்பன், இராவணன் எதற்கும் அசையாதது கண்டு கேலியாகப் பேசத் தொடங்குகிறான்: "நமக்குப் பாதுகாவலாக உள்ள கருங்கடலையே காற்றின் உதவியால் தாண்டும் குரங்குகள் பல உள்ளன. அவன்பால் உன்னை வாலில் கட்டிய வாலியின் மார்பைத் துளைத்துச் செல்லும் அம்புகள் பல உண்டு. சீதை நம்மிடம் உள்ளாள். வேறு என்ன குறை: (7357), இவ்வாறெல்லாம் கூறிய பிறகும் அறிவு விளக்கம் பெறாத இராவணன் மிக்க சினத்துடன், "நீ சென்று உறங்குவாயாக" என்று கூறியவுடன் அறிவுத் தெளிவின் எல்லைக்கே
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/407
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை