388 - 38 இராமன் - பன்முக நோக்கில் கும்பனைப் பற்றிய இத்தனை விளக்கங்களையும் வீடணன் மூலம் அறிந்த இராகவன், 'இவனைக் கொன்று ஒரு பயனும் இல்லை. அவனைக் கூட்டி வருக என்று கூறி, வீடணனை அனுப்பினான். குலத்து மானம் தவிராத கும்பன் ஒருத்தரின் (அண்ண்னின்) முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது என்று கூறி மறுத்தது, இராமனின் இரண்டாவது பகைவன் யார் என்பதை நன்கு அறிவிக்கின்றது. போர்க்களத்தில் இரர்மனைச் சந்திப்பதற்கு முன்னர், அனுமனுடன் போரிட நேர்ந்ததும், கும்பன் பற்றி அனுமன் பேசியதும் நினைவுகூரத்தக்கனவாகும். இவன் தோள்களை யாராலும் பிளத்தல் முடியாது. ஒருவேளை இராமன் அம்பு துளைத்தால் துளைக்கலாம் (7474) என்று மாருதியே கும்பன் பற்றிக் கூறுகிறான். இராமனை எதிர்கொண்ட கும்பன், போர்க்களத்தில் அவன் எதிரே பேசும் பேச்சுக்கள் இராவணன் எதிரே பேசிய பேச்சுக்களிலிருந்து மாறுபட்டவை ஆகும். இராமனை இன்னான் என்பதைத் தானும் அறிந்து, அண்ணனுக்கும் அறிவிக்க முயன்றான். ஆனால், போர்க்களத்தில் எதிரே நிற்கும் இராமனைப் பார்த்து எல்லையற்ற அலட்சியத்துடன் பேசுவது கும்பகர்ணனுக்கு அழகூட்டுவதாகும். "இராமா! கவந்தன் என்ற அசுரனையும், பூவில் தேன் எடுத்து உண்ணுகின்ற குரங்காகிய வாலியையும் வென்றுவிட்ட காரணத்தால் என்னையும் அவர்களைப் போல் எண்ணிவிடாதே" (7552) , "உன் தம்பி மேலும், அவனைத் துக்கிக் கொண்டு வருகின்ற அனுமனையும் நான் கோபிக்கவில்லை. வாலியின் தம்பியாகிய சுக்கிரீவனையும் நான் எதிர்த்துப் போராட வில்லை. காரணம், சிறியவர்களாகிய அவர்களுடன் போரிடுவது எனக்குப் புகழை உண்டாக்காது." (7553) "போர்க்களம் முழுதும் உன்னைத் தேடினேன். நீ அகப்படாத பொழுது உன் தம்பியையும் அவனைத் தோளில்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/409
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை