அரக்கர்களும் இராமனும் ே 389 தூக்கி வரும் அனுமனையும் சாடினேன். என் இலக்காகிய நீ எங்கும் காணப்படாமையால் எளிதாக என் கைக்குள் அகப்பட்ட இவனை (சுக்கிரீவனை) எடுத்துச் செல்ல முயன்றேன்." (7554) "பல இடங்களில் என்னால் தேடப்பட்ட நீ இப்பொழுது நல்ல வேளையாக என்னிடம் வந்து சிக்கினாய்". (7555) "ஏ இராமா! தேவர்கள் பார்த்துக் கொண்டே யிருக்கிறார்கள். இதோ என் கைக்குள் அகப்பட்டுத் தவிக்கும் இந்தக் குரங்கை நீ உன் கை அம்பினால் விடுவித்தாயானால் சீதை சிறையிலிருந்து விடுபட்டாள் என்றே வைத்துக் கொள்ளலாம்" (755) என்று இராமனைப் பார்த்துப் பேசியவன் கும்பன் ஒருவனே ஆவான். இவனுடைய வீர வசனத்தைக் கேட்ட இராமன் புன்சிரிப்புடன் "கும்பனே! நீ இப்பொழுது குரங்கைப் பற்றியிருப்பதாகக் கூறினாய்; அது தவறு. அந்தச் சுக்கிரீவன் என்பால் அடைக்கலம் புகுந்தவன். என் அடைக்கலப் பொருளை வவ்விய உன் கைகளைத் துணித்து என் அடைக்கலத்தை நான் விடுவிக்க முடியவில்லை என்றால், இனி இந்த வில்லைக் கையில் த்ொடேன்" (7.5) என்று வஞ்சினம் கூறி, இராம பொருதுவதும் இறுதியில் இராமனுடைய மலர்க்கரம் விதிர்த்ததும் கும்பனுடைய ஆண்மைக்கு எடுத்தக்காட்டாகும். இராமன் கையில் மடிந்த கும்பகர்ணன் எல்லா வகையிலும் இராவணனுக்குச் சமமான பலம் உடையவன். ஆயினும் அவனுடைய அகங்காரம், தீயொழுக்கம் என்பவை கும்பனிடம் இல்லாதது மட்டுமன்று, மாபெரும் அறிவாளியாகிய அவன் தன் அறிவைப் பயன்படுத்தி இராமன் யார் என்று அறிந்தாலும், வீடணனைப் போலத் தொடக்கத்திலிருந்தே அற வாழ்க்கை மேற்கொள்ளாமை யாலும், செஞ்சோற்றுக் கடனைப் பெரிதென மதித்த்மையாலும் இராமன் கை அம்பினால் இறக்கிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/410
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை