அரக்கர்களும் இராமனும் ேே 391 என்று அவன் முதலில் கருதி இருக்கலாம். அதைத் தவிர்க்க இரண்டு காரணங்கள் அவன் மனத்தில் தோன்றி இருக்க வேண்டும். கர, துரடணர்கள் முதலானவர்களை கடிகை மூன்றில் விண்ணில் ஏற்றியவனை விரைவாகப் போரில் வென்று சீதையைக் கவர்வது எளிதன்று என்பது ஒரு காரணம். அப்படியே அவர்களை வென்றுவிட்டால் கற்புக்கடம் பூண்ட பிராட்டி உயிரை விட்டுவிடுவாளே தவிர, சிறை பிடிக்கும் வரையில் காத்துக் கொண்டு இருக்க மாட்டாள். இந்த இரண்டு காரணங்களையும் நன்கு ஆராய்ந்த இராவணன், இராம, இலக்குவர்களுடன் போர்புரிவதால் தம் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை என்பதை நன்கு அறிந்து கொண்டான். அதனால்தான் ஒரு சூழ்ச்சி செய்து, இராம, இலக்குவர்களைப் பிரித்து பிராட்டியைக் கவர நினைத்தான். இராம இலக்குவர் பற்றி இராவணன் கருத்து இந்த நிலையில், இராகவன் பரம்பொருளின் அவதாரம் என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றவே இல்லை. முதற்போரில் பட்ட அனுபவத்திலிருந்துதான் இராமனைப் பற்றிய அவனுடைய கணிப்பு மாறிக்கொண்டே வருகிறது. முதற்போருக்கென்று வந்த இராவணன் இலக்குவனுடன் ஒரு சிறிது போர் செய்தபின் இலக்குவனைப்பற்றி அவன் கூறும் வார்த்தைகள், அவன் மனமாற்றத்தை அறிவிக்கின்றன. இலக்குவன் நாண் ஒலி கேட்டபொழுதே, சற்றும் எதிர்பாராத வியப்பில் ஆழ்ந்த இராவணன் தன்னுடைய முடியைத் துளக்கி என்னே! இவன் ஒரு மனிசன் (7159) என்று வியந்தானாம். இலக்குவன் மேல் ஏற்பட்ட இந்த மரியாதை, இராமனைச் சந்திக்கச் செல்லுமுன் இராவணன் மனத்தில் இராமனைப் பற்றி மிக உயர்வான ஒரு கருத்தைக் கொள்ளுமாறு செய்தது.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/412
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை