அரக்கர்களும் இராமனும் ே 393 இராவணன் வருத்தத்தோடு இருக்கவும், மாலியவான் இராவணனின் பாட்டன்) என்ன காரணம் என்று கேட்க, இராமனைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான் இராவணன். இப்பொழுதுதான் இராமன் சொன்ன அறவுரைகளைக் கேட்டு வந்துள்ளான் ஆதலாலும் சுத்த வீரனாகிய அவன் மற்றொரு மாபெரும் வீரனாகிய இராமனின் போர் முறையைக் கண்ட வியப்பாலும் தன்னையே மறந்து இதோ பேசத் தொடங்குகிறான்: . "நம்குலத்துக்குப் பங்கமும் பழியும் வந்துற்றது" - கம்ப 7286 "வளை அமை வரிவில் வாளி மெய்உற வழங்கும் ஆயின், இளையவன் தனக்கும் ஆற்றாது, என் பெருஞ்சேனை" - கம்ப.7287 "எண் இலா அரக்கர் கொல்லப்பட்ட வேளையிலும், என்னைப் பரிபவப்படுத்திய போதும் அவன் முகத்தில் சினத்தின் அறிகுறியே காணப்படவில்லை. சிறுவனாக இருந்த போது கூனியின் முதுகில் உண்டை அடித்தபோது என்ன மந்தகாசமான சிரிப்பு இருந்ததோ அதுவே இப்பொழுதும் இருந்தது. (உணர்ச்சிக்கு இடம் கொடாது கடமை ஆற்றும் கர்ம வீரனாகவே காட்சி அளித்தான்) (7288) "அவன் கைவாளி ஊழியையும் தீய்க்கும்; செல்லும் திசையையும், சொல்லும் வாயையும் தீய்க்கும்; நினைத்த மனத்தையும் தீய்க்கும். (எங்கள் வாளி பருப் பொருட்களைத் தான் தீய்க்கும். அவன் வாளி நுண் பொருள்களையும் மனத்தில் தோன்றும் எண்ணங்களையும் தீய்க்கும் என்றவாறு) (7290) "இந்திரன் வச்சிராயுதம், ஈசனுடைய திரிசூலம், திருமாலின் சக்கரம் என்பவற்றை நான் கண்டுள்ளேன். அவற்றிற்கு அஞ்சாத நான், இராமன் வாளியால் நொந்தேன் என்றால் பிறர் பற்றிச் சொல்ல வேண்டாம்." (7294)
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/414
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை