394 38 இராமன் - பன்முக நோக்கில் "இந்திரன் தோள்கள் இரண்டு, ஈசன் தோள்கள் எட்டு, திருமால் தோள்கள் ஆயிரம் ஆகிய அனைத்தும் இராமன் விரல் அசைப்பிற்கு ஈடு கொடுக்க மாட்டா." (7295) "வேதம் தப்பினபோதும் அன்னான் வில் உமிழ் சரங்கள் தப்பா." (7.297) r "அவன் வில்லை இடக்கையில் பிடித்துள்ளானா, வலக்கையில் பிடித்துள்ளானா, அதிலிருந்து வரும் அம்புகள் நான்கு திசைகளிலும், கீழும், மேலும் எங்கிருந்து வருகின்றன என்று இன்னும் நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லை." (7299) "ஒரு குரங்கின் தோளின் மேல் ஏறிக் கொண்ட ஒரு மனிதன் காற்றில் ஏறி வந்தானா, கனலில் ஏறி வந்தானா, கருடன் மேல் வந்தானா, எமன்மேல் வந்தானா என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு வேகமாகச் சாரி சுற்றி வந்தான்." (7300) "இந்திரன், திருமால், நான்முகன், மழுவேந்திய ஈசன் என்று பேர் சொல்லப்படும் மிகச் சாதாரணமானவர்களால் எனது முடிவு ஏற்படப்போவதில்லை. நாசம் வந்துற்றபோது என்னால் மதிக்கத் தகுந்த நல்லதொரு பகையைப் பெற்றேன்.” (7302) -மேற்கண்ட முறையில் இராகவன் போர்த்திறமையை அங்குலம், அங்குலமாக நினைந்து பார்த்து வியப்பாகி, தன்னை மறந்து அவன் வில் ஆற்றலை இதுவரை புகழ்ந்துகொண்டே வந்த இராவணன், மறுபடியும் இராமனைப் பாதாதிகேசம் தன் கற்பனைக் கண்களால் காண்கிறான். ஆடவர் பெண்மையை அவாவும், அந்த அழகனைப் போர்க்களத்தில் அல்லாமல் அமைதியாக இருந்து கொண்டு மனக்கண்ணில் கண்டு ரசிக்கின்றான். "அந்த ராம செளந்தர்யம் அளவிடப்போமோ' என்ற நினைவு தோன்றியவும் அந்த அழகைக் கண்டு, ரசித்து மகிழும் பிராட்டி, அந்த இராமனைக் கண்ட பிறகு தன்னையும்,
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/415
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை