அரக்கர்களும் இராமனும் ே 395 மன்மதனையும் கண்டால் தங்கள் இருவரையும் நாய் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை" என்ற முடிவிற்கு வந்து பேசுகிறான்." (730) மீண்டும் முருங்கை மரத்தில் ..... இந்த மனநிலையை மகோதரன் என்ற அவன் மாமன் வந்து கெடுத்துப் பழைய இராவணனை அவனுள் உசுப்பி விட்டு விட்டான். இறுதிப் போர் இதன் பிறகு, இராவணன் இராமனைச் சந்திப்பது இறுதிப் போரில்தான். உறவினர் என்று சொல்லத்தக்கவர், படைத்தலைவர் என்று சொல்லத்தக்கவர் அனைவரையும் ஒருசேர இழந்த நிலையில் இறுதிப்போருக்குப் தயாராகிறான் இராவணன். இப்பொழுது அவனுடைய மனநிலையில் எவ்விதக் குற்றமோ அழுக்கோ இல்லை. அனைவரும் இறந்த பிறகு தான்மட்டும் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான் இராவணன். போரிட்டு மடிதல் தன் சிறப்புக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் என்ற எண்ணத்துடன் அமைதியான முறையில் அன்றாடம் வழிபடும், "ஈசனை இமையா முக்கண் ஒருவனை, இருமைக்கு ஏற்ற பூசனை முறையின் செய்து" - கம்ப 9644 போருக்குப் புறப்பட்டான் என்று பாடுகிறான் கவிஞன். இருமைக்கு ஏற்ற பூசனை என்பது, இம்மை, மறுமை என்ற பொருளைத் தாராமல், காமிய பூசை, நிஷ்காமிய பூசை என்பவற்றில் இன்று அவன் வேண்டிக் கொள்வது எதுவும் இல்லை ஆதலால், நிஷ்காமிய பூசையே செய்தான் என்ற பொருள் கோடல் பொருந்தும். நிஷ்காமிய பூசையைத்தான் மன அமைதியோடு முறையாகச் செய்ய முடியும். இறுதிப்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/416
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை