பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 38 இராமன் - பன்முக நோக்கில் போருக்குப் போகுமுன் அவ்வாறு செய்தான் என்கிறான் கவிஞன். இத்தகைய பூசை முடிந்தவுடன் உள்ளம் தூய்மை பெற்றிருக்கும். ஆதலால் போர்க்களத்தில் இராமனைச் சந்தித்த போது அவனுடைய காட்சி பழைய காட்சியிலிருந்து மாறுபடுகிறது. முன்னர் இராகவனின் போர் ஆற்றலில் தன்னை மற்ந்து ஈடுபட்ட இராவணன், சமதிருஷ்டி பெற்று விட்ட நிலையில் முன்னர்க் கூறியவையெல்லாம் மறந்துவிடுகின்றன. இராவணன் கண்ட தோற்றம் இப்போது எதிரே நிற்கும் ஒருவன் தசரதராமனாகவோ, பகைவனாகவோ, மன்மதனை வென்ற அழகனாகவோ, மும்மூர்த்திகளின் மேம்பட்ட வீரனாகவோ தெரியவில்லை. ஆம்! சமதிருஷ்டியுடன், நிஷ்காமிய பூஜை செய்து அதே மனோநிலையில் போர்க்களம் புகுந்தபொழுது எதிரே நிற்பவன் யாராக இருக்கும் என்று ஆராய்ச்சியில் அவன் சிந்தனை ஒடுகிறது. ‘இவன் சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனோ அல்லன், மெய்வரமெல்லாம் சுடுகின்றான்” (9837) என்ற நினைவு வந்த பிறகு தன்னைக் காட்டிலும் அதிகத் தவஞ்செய்து வரங்கள் பெற்றவனாய் இருப்பானோ என்ற எண்ணம் தலைதூக்கியவுடன் மறுபடியும் எதிரே நிற்பவனைக் காண்கிறான். பல்லூழிக்காலம் தவம் செய்த வயது இவனுக்கில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டான். அப்படியானால் இவன் யாராகத்தான் இருக்க முடியும் என்ற வினா அவன் புறமனத்தில் தோன்றி, அகமனத்துள் சென்று புத்தியை ஊடுருவி அவனுடைய அகங்காரத்தையும் ஆட்டுவித்த பிறகு அந்த ஆணவம், இவன் யார் என்ற கேள்விக்குப் பதில் கூற முடியாமல் அடங்கி விடுகிறது. எனவே, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற 膏 - இராவணன் செய்த சிவபூசை பற்றிய திறனாய்வினை 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' என்ற நூலில் காணலாம்.