அரக்கர்களும் இராமனும் ேே - 397 அந்தக்கரணங்கள் நான்கையும் கடந்த பிறகு அந்த வினாவிற்கு விடை கிடைக்கிறது. - பிரம்மத்தைப் பற்றிச் சுட்டிக் கூற வந்த வேதம்,"இதுவல்ல, இதுவல்ல நேதி, நேதி) என்று கூறி முடித்துவிட்டதே தவிர, இதுதான் என்று சுட்டாமல் விட்ட பொருள்தான் இவன் என்ற முடிவுக்கு வருகிறான், ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தவனாகிய இராவணன். எனவே, சிவனல்லன், நான்முகனல்லன் என்று தொடங்கியவன் அந்த வேதம் கூறும் இதுவல்ல என்பதற்கும் அப்பாற்பட்டு, 'இவனோதான் அவ்வேத முதற்காரணன் என்ற முடிவுக்கு வருகிறான். இவனோ என்பதில் உள்ள ஒகாரம், ஐயம், வினா முதலிய பொருள்களில் வாராமல், வியப்புப் பொருளில் வந்தது. மனம் மாறிவிட்டான் இந்த மெய்யுணர்வு இராவணனுக்கு வந்தது உண்மைதான். ஆனால், வந்த மெய்யுணர்வை வைத்து வாழத் தவஞ்செய்யாதவன் அவன். எனவே, உடனே மனம் மாறிவிடுகிறான். திரு அவதாரப் படலத்தின் இறுதிப் பாட்டில், கவிஞன் இராமன் யாா என்பதைத் தன் கருத்தாக, முப் பரம் பொருளுக்கு முதல்வன் (313) என்று கூறித் தொடங்கி, காப்பியத்தின் இறுதியில் ஆயிரம் மறைபொருள் உணர்ந்து அறிவு அமைந்த இராவணன் கூட இவன்தான் வேத முதற்காரணன் என்று தன் கருத்தையே அவனும் பேசுகிறான் என்று முடிந்துள்ளமை நினைந்து நினைந்து இன்புறுதற் குரியதாகும். இராவண வதமே இராமாவதார நோக்கம். அவன் மடிவது கடைசியில்தான். அவனுக்கு முன்னரே எண்ணிலா அரக்கர் மாய்ந்தனர். அறம் தலைநிறுத்த வந்த தலைவன் தீயோர் உக நூற வந்த பரம்பொருள் இராவண வதத்தோடு தன் திருவிளையாட்டினை ஒர் எல்லையில் நிறுத்திவிட்டது.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/418
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை