பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பரம்பொருளும் இராமனும் மிகப் பழைமையானது என்று கருதப்படும் ரிக்வேதத்தில் சிவன் பற்றி நான்கு, ஐந்து பாடல்களும் விஷ்ணு பற்றி ஆறு, ஏழு பாடல்களும்தான் உள்ளன. இவர்கள் யாரையும் முழு முதற் பொருளாக வேதம் குறிக்கவில்லை. தெய்வங்களுக்குள் இந்திரன், வருணன் ஆகியோரையே மிக உயர்ந்த தெய்வங்கள் என்று ரிக் வேதம் குறிக்கும். புருஷசூக்தம் முதலியவை மிகப் பிற்பட்ட காலத்தில் வேதத்துடன் சேர்க்கப்பட்டவை ஆகும். உருவ வழிபாட்டை வேதங்களில் காணமுடியாது. வேள்விகளையே பெரிதாக நம்பி அவற்றைச் செய்வதன்மூலமே இந்திரன் முதலியவர்களின் அன்பைப் பெறலாம் என்றுதான் வேதகால மக்கள் நம்பினர். காலம் செல்லச் செல்ல வேதத்தின் பிற்பகுதியாகிய உபநிடதங்கள் தோன்றலாயின. அறிவு, ஞானம் என்ற இரண்டும் ஈடு இணையற்று வளர்ந்த காலத்தில் இந்நாட்டு முன்னோர்கள் உபநிடதங்களைச் செய்தனர். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் பரம்பொருளுக்கு இலக்கணம் கூறும் வகையில் இவ்வளவு உயர்ந்தனவும் ஈடு இணையற்றனவுமாகிய நூல்கள் அந்தக் காலகட்டத்தில் தோன்றவில்லை என்பது உண்மைதான். . . . வடபுலத்தைப் பொறுத்தவரை நிலைமை இவ்வாறு இருக்க, தென்புலத்தைப் பொறுத்தவரை கிறிஸ்து பிறப்பதற்கு 7, 8 நூற்றாண்டுகள் முன்னரே கடவுட் கொள்கை வலுப் பெற்றிருந்தது என்பதைத் தொல்காப்பியம் மூலம் அறியமுடியும். பரம்பொருளைக் குறிக்கக் கடவுள்' என்றும், குறிப்பிட்ட சில பணிகளை நிறைவேற்ற வந்த தெய்வங்களைத்