400 38 இராமன் - பன்முக நோக்கில் "தெய்வங்கள் என்றும் தொல்காப்பியம் சொல்லிச் செல்கிறது. தொல்காப்பியம் பயன்படுத்தும் கடவுள், தெய்வம், கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற சொற்களின் உண்மையான பொருளை இதுவரை கண் டோமா என்பது ஐயத்திற்குரியதாகும். சங்க காலப் பாடல்கள் தோன்றிய காலத்தில் கடவுட் கொள்கையோடு, புராணக் கதைகளும் வலுவான இடத்தைப் பெற்றுவிட்டன. தொடக்கத்திலிருந்தே இத் தமிழர்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டனர் என்பதில் ஐயமில்லை. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டதால் பரம்பொருளின் இலக்கணத்தை மறந்து, இந்த உருவங்களுக்குள் அதனை அடக்கிவிட்டனர் என்று நினைப்பது தவறாகும். உதாரணமாக, நற்றிணை கடவுள் வாழ்த்துப் பகுதியை எடுத்துக் கொள்ளலாம். "மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத் அடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனை." - - பெருந்தேவனார். இந்தப் பாடலில் சக்கரப் படையை உடைய திருமாலை, விசுவரூபமாக வருணித்த பிற்கு, அவனை வேத முதல்வன்' என்று கூறியிருப்பதைக் காணலாம். ஐந்து வடிவங்களில் உள்ள மகா விஷ்ணுவைத் திருமால், மாயோன் என்ற சொற்களாலேயே பழந்தமிழர் வருணித்துள்ளனர். ஆனாலும் அவனை வேத முதல்வன் என்று சங்கப்பாடல் குறிப்பதைக் கி.பி.2ஆம் நூற்றாண்டு தோன்றிய சிலப்பதிகாரமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இராமாவதாரத்தைக் குறிக்கையில், வேத முதல்வன் பயந்தோன் - சிலம்பு, ஊர்காண். 48 என்றே இளங்கோவடிகள் குறிப்பதைக் காணலாம். பரம்பொருளுக்கு இப்படி விளக்கம் தந்த அந்தப் பழைய
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/421
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை