பரம்பொருளும் இராமனும் ே 401 காலத்திலேயே புராணக் கதைகளை ஏற்றுக்கொண்டு அவனை வருணிக்கும் திருமால்பற்றிய பாடல்கள் பரிபாடலில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் தொட்டுச் சங்கப்பாடல் வரை காணப்படும் இப் பரம்பொருள் விளக்கம், ஆழ்வார்கள் காலத்தில் அவதாரங்களைப் பரம்பொருளாகவே ஏற்றுக்கொண்டு, இந்த அவதாரங்கள் நிகழ்த்திய செயல்களைப் பரம்பொருள் நிகழ்த்திய செயல்களாகவே பாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. ஆழ்வார்களுள் 'அங்கி' என்று வருணிக்கப்படும் நம்மாழ்வார், திருவாய்மொழியின் தொடக்கத்தில் இந்த மாபெரும் தத்துவக் கருத்துகளை அருளியுள்ளார். "உயர்வற உயர்நலம் உடையவன் எவன்?" "அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்?" "மனனுணர்வு அளவிலன், பொறியுணர்வு அவையிலன் "இலன்அது, உடையன் இது என நினைவு அரியவன்" "நிலனிடை விசும்பிடை உருவினன், அருவினன்" "திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசைப் படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து, எங்கும் பரந்துளன்" "உளன் எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள்; உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்" "கரந்து, எங்கும் பரந்துளன்"
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/422
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை